ரொனால்டோவின் பிறந்தநாளுக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - கியூட் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகின் ஜாம்பவானாக அறியப்படுகிறார். இவர் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடினார். உலகம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்கள் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்தையும் அன்பையும் வெளிப்படுத்தினர். இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மனைவியும் மாடலுமான ஜார்ஜினா ரோட்ரிகர்ஸ் தனது காதல் துணைவனுக்கு பிரம்மாண்ட பரிசு ஒன்றினை அளித்துள்ளார்.

ரொனால்டோவின் பிறந்தநாளுக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - கியூட் வீடியோ..!
Advertising
>
Advertising

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரிசு வழங்கிய வீடியோவை ரோட்ரிகர்ஸ் வெளியிட தற்போது அது வைரலாகப் பரவிவருகிறது. அப்படி என்ன பரிசு? புதுப்புது கார்களின் மீது காதல்கொண்டவரான ரொனால்டோவிற்கு கெடில்லாக் எஸ்க்லேட் (Cadillac Escalade) காரை பிறந்தநாள் பரிசாக வழங்கியிருக்கிறார் ஜார்ஜினா ரோட்ரிகர்ஸ்.

Cristiano Ronaldo Gets surprise From Partner Georgina Rodriguez

வீட்டு வாசலில் நின்றிருந்த காரை ரொனால்டோ ஆச்சர்யத்துடன் நிற்பதை வீடியோவாக பதிவுசெய்த ரோட்ரிகர்ஸ் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்படி என்ன இருக்கு அந்தக் காரில்..

100,000 அமெரிக்க டாலர்கள் விலைகொண்ட (இந்திய மதிப்பில் சுமார் 75 லட்சம் ரூபாய்) இந்த SUV ஐரோப்பாவில் விற்பனையில் இல்லை. ஆகவே, வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக இறக்குமதி செய்து தனது அன்பினை வெளிப்படுத்தியிருக்கிறார் ரொனால்டோவின் மனைவி.

கெடில்லாக் எஸ்க்லேட் சுமார் 5.5 மீட்டர் நீளம் கொண்டது, அதே சமயம் 6.2 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட V8 எஞ்சினிலிருந்து 414 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும் வல்லமை படைத்தது. மேலும் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் திறன் கொண்டது. இந்த SUV கார் 0-100 கிமீ வேகத்தை 5.9 வினாடிகளில் எட்டிவிடும். 4x4 பவரைக் கொண்டுள்ள இந்த SUV உண்மையில் கார்களின்  ஜாம்பவான் தான்.

கார்களின் காதலன்

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது வீட்டில் புகாட்டி சிரோன், ஃபெராரி டி12 டிடிஎஃப், புகாட்டி வேய்ரான், மெக்லாரன் சென்னா, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி-வேகன், லம்போர்கினி அவென்டடோர், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட், மஸராட்டி கிரான் காப்ரியோ, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் உள்ளிட்ட பல அரிய கார்களை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறது இந்த கெடில்லாக் எஸ்க்லேட்.

 

CADILLACESCALADE, இன்ஸ்டாகிராம், ரொனால்டோ, கார், RONALDO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்