பதவியை புடுங்கிட்டாங்க.. KL ராகுலுக்கு அதிர்ச்சி அளித்த BCCI.. இலங்கை தொடருக்கு புதிய துணைக் கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 2023 ஆம் ஆண்டினை பல மாற்றங்களுடன் துவங்கியுள்ளது.
Also Read | முதல் ஐபிஎல் ஏலத்தில் தோனி செஞ்ச சம்பவம்.. 15 வருசமா தொட முடியாத ரெக்கார்டு.. மிரண்டு போன ரசிகர்கள்!!
புதிய ஆண்டு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் வரும் ஆண்டு முழுவதும் பல முக்கிய போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. 2023 ஆம் ஆண்டில், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 13வது பதிப்பை இந்தியா நடத்துகிறது, மேலும் ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி, பார்டர்-கவாஸ்கர் டிராபி போன்ற முக்கிய தொடர்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது.
இலங்கைக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 27) வரவிருக்கும் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. இந்த தொடர் மூன்று டி20 போட்டிகளுடன் தொடங்குகிறது, மேலும் ஹர்திக் பாண்டியா 20 ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் ஆகியோருக்கு 20 ஓவர் அணியில் இடமில்லை. ஜனவரி 10 ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்கும் ஒருநாள் போட்டிகளில் ரோஹித் மீண்டும் அணியை கேப்டனாக வழிநடத்துவார். ஆனால் இந்த தொடரில், KL ராகுல் ODI துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ராகுல், ரோஹித் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதில் இருந்து அவருக்கு துணையாக இருந்தவர், ஆனால் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய ஒருநாள் அணியின் புதிய துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 2022 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும், ஆகஸ்ட் 2022 இல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் ரோஹித் இல்லாதபோது ராகுல் இந்தியாவை வழிநடத்தினார், ஆனால் இப்போது அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக ராகுல் விளையாடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் இன்றுவரை ஆறு டி20 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார், ஆனால் ஒரு நாள் அணிக்கு ஒருபோதும் கேப்டனாக இருந்ததில்லை.
இந்தியா & இங்கிலாந்து இடையிலான மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் முறையே ஜனவரி 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கவுகாத்தி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும்.
Also Read | இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. லிஸ்ட்ல இடம்பெறாமல் போன நட்சத்திர வீரர்.. முழு விபரம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வம்புக்கு வந்த ட்விட்டர்வாசியை பங்கமாக செஞ்சு விட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்.. "மனுஷன் சேட்ட புடிச்ச ஆளுங்க 😅"
- "ரவி அஸ்வினை இந்திய அணிக்கு கேப்டன் ஆக்கலாம்".. புள்ளி விவரத்தோடு BCCI-க்கு ஐடியா கொடுத்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்!
- ஐபிஎல் 2023 : CSK கேப்டன் தோனியா? ஸ்டோக்ஸ்-ஆ?.. கிறிஸ் கெயில் சொன்ன அசத்தலான பதில்!!
- "இந்திய அணில யார் கூடவும் எனக்கு பிரச்சினை இல்ல".. மனம் திறந்து விளக்கமளித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
- "ஏலத்துல என்னை மும்பை அணி எடுத்த 2 நிமிஷத்துல அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு".. சூரிய குமார் பற்றி மனம் திறந்த இளம் வீரர்..!
- "தம்பி பெரிய கிரிக்கெட் பிளேயரா வரணும்".. சகோதரனுக்காக அண்ணன் செஞ்ச தியாகம்.. ஐபிஎல் ஏலத்தில் பட்டையை கிளப்பிய பின்னணி!!
- மறைந்த ஷேன் வார்னே-வுக்காக திரண்ட ரசிகர்கள்.. மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. நெட்டிசன்களை கலங்க வச்ச வீடியோ..!
- சச்சினுக்கே Tough கொடுக்கும் அஸ்வின்.. அடுத்த சாதனைக்கு அஸ்திவாரம்.. பெரும் எதிர்பார்ப்பில் கிரிக்கெட் உலகம்..!
- "கோலி செஞ்சத ஈஸியா மறக்க முடியாது".. வங்காளதேச அணியினருடன் ஆவேசம்.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு கருத்து!! நடந்தது என்ன?
- 'துணிவு' படத்தோடு பென் ஸ்டோக்ஸ் ஏலத்தை Connect செய்த CSK.. செம TRENDING