கெய்லை துரத்தும் பொல்லார்ட்.. என்னது இத்தனை சிக்ஸர்களா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி-20 கிரிக்கெட் அரங்கில் மும்பை இந்தியன்ஸ் வீரர் பொல்லார்ட் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 24-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, கே.எல்.ராகுல் 100 ரன்களும், கிறிஸ் கெய்ல் 63 ரன்களும் எடுத்து அதிரடியாக ஆடியதால் 197 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய மும்பை அணி, பொல்லார்டின் ருத்ரதாண்டவத்தால் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், அந்த அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில், கேப்டனாக களமிறங்கிய பொல்லார்ட், 31 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார். மொத்தம் 10 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதன்மூலம், டி-20 கிரிக்கெட் அரங்கில் 600 சிக்ஸர்கள் விளாசியவர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றார். அவர்,வெஸ்ட் இண்டீஸ் அணியை தவிர்த்து, உலகம் முழுவதும் 15 டி-20 அணிகளுக்கு விளையாடியுள்ளார்.

டி-20 போட்டிகளில் 925 சிக்ஸர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் இருக்கிறார். பொல்லார்ட் 602 சிக்ஸர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். 485 சிக்ஸர்கள் அடித்து நியூசிலாந்தின் மெக்கல்லம் 3-வது இடத்தில் இருக்கிறார்.

POLLARD, GAYLE, T20, SIXES, RECORDS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்