35 ரன்களுக்கு ஆல் ‘அவுட்’... ‘18 ஓவர்களுக்குள்’ முடிந்த ‘ஒரு நாள்’ போட்டி... ஒரே மேட்சுல ‘எத்தன’ மோசமான சாதனை!...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேபாளத்திற்கு எதிரான போட்டியில் யு.எஸ்.ஏ அணி 35 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை லீக் போட்டியில் நேபாளம் - யு.எஸ்.ஏ அணிகள் மோதியுள்ளன. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய யு.எஸ்.ஏ அணி 35 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்த அணி வீரர் சேவியர் மார்செல் 15 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்களாகும்.
இந்தப் போட்டியில் நேபாள அணியின் சுஷன் பாரி 16 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து விளையாடிய நேபாளம் 32 பந்துகளில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. யு.எஸ்.ஏ அணி வெறும் 12 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், இதன்மூலம் ஒரு நாள் போட்டியில் குறைந்த ஓவரில் எதிரணியினரை சுருட்டிய அணி என்ற சாதனையை நேபாளம் நிகழ்த்தியுள்ளது.
மேலும் ஒரு நாள் போட்டிகளில் யு.எஸ்.ஏ அடித்துள்ள 35 ரன்களே குறைந்தபட்ச ரன்களாகும். இதற்கு முன்னதாக கனடா (36), ஜிம்பாவே (38), இலங்கை (43) ஆகிய அணிகள் இதுபோல குறைந்த ரன்கள் அடித்துள்ளன. மொத்தமாக இந்தப் போட்டி 17.2 ஓவர்களில் முடிவுக்கு வந்த நிலையில், குறைந்த ஓவரில் முடிவுக்கு வந்த ஒரு நாள் போட்டி என்ற சாதனையையும் இது படைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: '1270 கிலோ வெடி மருந்து... 671 மீட்டர்... சில விநாடிகளில் சிவப்பாக மாறிய வானம்... கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கா!
- 'டி-20' போட்டியில் 3 வீரர்களால் '200 ரன்கள்' அடிக்க முடியும் ... முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் 'யுவராஜ்சிங்' கணிப்பு...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'இந்த' மாதிரி பண்றவங்கள 'வச்சுக்கிட்டு'... நான் 'என்ன' செய்றது?... கடுப்பான கோலி!
- உங்களுக்கு 'சூப்பர் ஓவர்' நடத்தியே... நாங்க 'ஓய்ஞ்சு' போயிட்டோம், அதனால 'நல்லா' கேட்டுக்கங்க... புதிய 'விதிகளை' வெளியிட்ட ஐசிசி!
- பேசாம 'அவர்கிட்ட' குடுத்துருங்க... இதுக்கு மேலயும் நீங்க 'கேப்டனா' தொடரணுமா?... வறுக்கும் ரசிகர்கள்... காரணம் இதுதான்!
- உண்மையிலேயே 'காயம்' சரியாகிடுச்சா?... அவர 'பார்த்தா அப்டி... சந்தேகம் எழுப்பும் ரசிகர்கள்!
- இந்த 'ரணகளத்துக்கு' மத்தியிலயும் ஒரு கிளுகிளுப்பு... சக வீரருடன் இணைந்து செம 'ரொமாண்டிக்' போஸ்...வைரலோ வைரல்!
- அவரு 'அப்டி' பண்ணதுக்கு...என்ன காரணம்னு 'நாங்க' கண்டு புடுச்சிட்டோம்... மரண கடுப்பிலும் 'கடமை' தவறாத ரசிகர்கள்!
- ‘இப்டி மோசமா தோற்றுப் போனதுக்கு’... ‘அந்த இளம் வீரர் தான் காரணம்’... ‘அவர ஏன் இன்னமும் டீம்ல வச்சிருங்கீங்க’... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!