13 வருட 'கிரிக்கெட்' வாழ்க்கை முடிவுக்கு வந்தது...'அனைத்து' விதமான போட்டிகளில் இருந்தும் 'ஓய்வு' பெறுகிறேன்...பிரபல வீரர் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா அறிவித்து இருக்கிறார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஓஜா கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். 33 வயதான ஓஜா இதுவரை இந்திய அணிக்காக 24 டெஸ்ட், 18 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக ஓஜா இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் ஆடினார்.
அந்த போட்டியோடு சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே ஓஜாவின் கடைசி போட்டியாகவும் அமைந்து விட்டது. அதேபோல முதல்தர கிரிக்கெட்டில் கடந்த 2018-ம் ஆண்டு பீஹார் அணிக்காக ஓஜா ஆடினார். அதன்பின் அவர் கிரிக்கெட் ஆடவில்லை. இந்த நிலையில் ஓஜா தற்போது தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர், ''எனக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நேரமிது,'' என தெரிவித்து இருக்கிறார். ஐபிஎல்லை பொறுத்தவரை டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக ஆடி இருக்கிறார். இரண்டு அணிகளுமே இவர் விளையாடிய ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ரெண்டே ரெண்டு 'ரன்' தான்...! ‘தட்டி தூக்கிய ஜெம்மிசன்...’ 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி திணறல்...!
- VIDEO: ‘தோனியை சூழ்ந்த ரசிகர் கூட்டம்’!.. மின்னல் வேகத்தில் Bodyguard-ஆக மாறிய பெண் யார்..? வைரல் வீடியோ..!
- 'முன்னணி' வீரரைக் கழட்டிவிட்டு... 'இளம்வீரருக்கு' வாய்ப்பளித்த கேப்டன்... 'ஷாக்கான' ரசிகர்கள்!
- உலகின் 'சிறந்த' விக்கெட் கீப்பரா இருந்தாலும்... 'ஓரமா' தான் உட்காரணும்... கோலி போடும் 'புது' கணக்கு!
- 'எல்லா விதமான கிரிக்கெட்டிலும்'... 'இவர்தான் தலைச் சிறந்த வீரர்'... 'இந்திய வீரரை புகழ்ந்த நியூசிலாந்து கேப்டன்'!
- ‘ஊழல்’ புகார் விசாரணையால்... ‘பிரபல’ வீரர் அதிரடி ‘இடைநீக்கம்’... ‘கிரிக்கெட்’ நடவடிக்கைகளில் ஈடுபட தற்காலிக ‘தடை’...
- எப்டி போனாரோ அப்டியே 'திரும்பி' வந்திருக்காரு... 'ஓபனிங்' எறங்கப்போறது 'இவங்க' தான்... ரகசியம் 'உடைத்த' கேப்டன்!
- 'எல்லாத்தையும்' எடுத்துக்கிட்டீங்க... அட்லீஸ்ட் இதையாவது 'அவருக்கு' விட்டு வைங்க... சீரியசாக 'அட்வைஸ்' செய்யும் ரசிகர்கள்... என்ன ஆச்சு?
- தம்பி! நீங்க அங்க போய் 'வெளையாட' வேணாம்... நாங்க 'சொல்றத' மட்டும் கேளுங்க... முன்னணி வீரருக்கு 'ஆர்டர்' போட்ட பிசிசிஐ!