‘இனி இதிலும் கிரிக்கெட்டை பார்க்கலாம்’... 'வெளியான புதிய தகவல்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வரும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டி நிச்சயம் இடம்பெறும் என்று சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசி நம்பிக்கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘இனி இதிலும் கிரிக்கெட்டை பார்க்கலாம்’... 'வெளியான புதிய தகவல்'!

உலக கிரிக்கெட் அமைப்புகளில் மிகவும் பெரிய அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியமான பிசிசிஐ, அண்மையில் தேசிய ஊக்க மருந்து தடை அமைப்பின் விதிமுறைகளுக்குள் வந்தது. ஒரு விளையாட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற வேண்டும் என்றால், அந்த விளையாட்டு தொடர்பாக உள்ள அமைப்புகள் அனைத்தும் உலக ஊக்க மருந்து தடை அமைப்பின் விதிகளுக்குள் வரவேண்டும். இந்நிலையில் கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்ப்பது தொடர்பாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டி தலைவர் மைக் கேட்டிங் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘நாங்கள் கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கும்படி ஐசிசியுடன் கேட்டு கொண்டிருக்கிறோம். இதற்கு ஐசிசியின் புதிய செயல் அதிகாரி மனு சாஹனி, இந்த விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் வரும் 2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். அடுத்த 18 மாதங்களில் அதை செய்வது எப்படி என்பது முடிவு செய்யப்படும் சூழல் உருவாகும் என்று நினைக்கிறேன்.

பிசிசிஐ ஒலிம்பிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் இருவரும் விளையாட வேண்டும். அனைத்து நாடுகளும் இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மகளிர் கிரிக்கெட் போட்டி 2022ம் ஆண்டு காமன்வெல்த்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்டது’ என்றார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், சச்சின் டெண்டுல்கரும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ICC, BCCI, OLYMPICS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்