"இந்த அட்வைஸ் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?..." 'மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு' போட்டியாக....'களமிறங்கிய பிசிசிஐ...'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநாடு முழுதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸூக்கு எதிராக பாதுகாத்துக்கொள்வது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டான பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கம் மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான முறையில் அட்வைஸ் அளித்துள்ளது.
இந்திய மக்கள் எப்படி கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என பிசிசிஐ சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான மகேந்திரசிங் தோனி, விராட் கோலி உள்ளிட்டோரின் ஃபோட்டோக்களை போட்டு அதன் கீழ் சில கேப்ஷன்களை ஆலோசனைகளாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அதில் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும் . வெளியே செல்லக்கூடாது. அப்படி சென்றாலும் போதிய இடைவேளையை கடைபிடிக்க வேண்டும். கைகளை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டு வேலைகளில் உதவி செய்ய வேண்டும். முக்கியமாக இந்த தகவல்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். என்பது போன்ற ட்வீட்டுகளை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.
ஆலோசனைகளுக்கு பொறுத்தமான நட்சத்திர விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களுக்கு கீழே இந்த கேப்ஷன்கள் போடப்பட்டுள்ளதால் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '30 பங்களாக்களை' 'தானம்' செய்த 'தொழிலதிபர்...''கொரோனா' சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள 'அனுமதி...' 'வசதிகளை' ஏற்படுத்தித் தருவதாகவும் 'உறுதி...'
- 'மதுரையில்' கொரோனாவுக்கு இறந்தவரின் 'இறுதிச் சடங்கு'... வெறும் '4 பேருக்கு' மட்டுமே 'அனுமதி'... தெரு முழுவதும் 'தடுப்புகள்' ... 'உருக வைக்கும் சோகம்'
- ‘லாக் டவுனில் மட்டுமே நேரத்தை செலவு பண்ணாதீங்க’... ‘உலக நாடுகள் இந்த 6 விஷயங்களையும் சேர்த்து செய்யுங்க’... எச்சரிக்கும் WHO இயக்குநர்-ஜெனரல்!
- "நீங்க 21 நாளுனா..." "நாங்க 2 மாசம்..." "நோ இன்கம்மிங்... நோ அவுட் கோயிங்..." 'பக்கா பிளானிங்...' உலக நாடுகளுக்கு 'சவால்' விடும் 'அமெசிங் வில்லேஜ்...!'
- கொசு கடிச்சா கொரோனா பரவுமா?.. மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்..!
- '50 மணி நேரம்...' '2,500 கிலோமீட்டர்...' '5 மாநிலங்களைக் கடந்து...' ஆச்சரியமூட்டும் 'சாகசப் பயணம்...' 'மகளை' மீட்ட 'தந்தையின்' பாசப் 'போராட்டம்'...
- ‘இந்த நேரத்துல அத பண்ணா.. தப்பான முன்னுதாரணமாகிடும்’.. துணை கலெக்டர் எடுத்த முடிவு..!
- 'கொரோனாவை வென்று வீடு திரும்பிய குடும்பம்!'... கைதட்டி... ஆரவாரம் செய்து... பிரம்மாண்ட வரவேற்பு அளித்த மக்கள்!... திகைப்பூட்டும் உண்மை சம்பவம்!
- ‘கொரோனா விழிப்புணர்வு’!.. ‘பெற்றோர்கள் கட்டாயம் இந்த விஷயத்தை குழந்தைங்ககிட்ட சொல்லணும்’..!
- 'சென்னைக்கு போய்ட்டு தான் வரோம்'... 'கொரோனா டெஸ்ட்க்கு வர முடியாது'...'பதறி போன பொதுமக்கள்!