'கொரோனா' கண்ணுக்கு முன்னாடி வந்து போகுமா இல்லையா'... 'ஆரோன் பின்ச்' செஞ்ச சேட்டை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சும் நகைச்சுவையில் ஈடுபட்டது தற்போது வைரலாகி வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா  வைரஸ் கிரிக்கெட்டை மட்டும் விட்டு வைக்குமா என்ன? ரசிகர்களே இல்லாமல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. உலக புகழ்பெற்ற சிட்னி மைதானம் ரசிகர்களின் ஆரவாரம் இல்லாமல் வெறிசோடி காணப்படுகிறது.

இதற்கிடையே போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி கேப்டன்களும் டாஸ் போடுவதற்கு வந்தனர். பொதுவாக டாஸ் போட்ட பின்பு இரு அணி கேப்டன்களும் கைகுலுக்கி கொள்வது வழக்கம். அந்த வகையில், ஆரோன் பின்ச் கை குலுக்குவது போல குலுக்கி, பின்பு தனது கையை விலகி கொண்டார். இதையடுத்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்து கொண்டார்கள்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக தலைவர்கள் யாரும் கைகொடுப்பது இல்லை. அதையே இரு வீரர்களும் பின்பற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

KANE WILLIAMSON, CORONAVIRUS, AARON FINCH, HANDSHAKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்