8 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா.. மீண்டும் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களம் இரங்கும் இந்திய அணியில் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6,9,11 ஆகிய தேதிகளிலும், டி20 தொடர் பிப்ரவரி 16,18,20 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது.

இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோஹித் ஷர்மா, துணைக் கேப்டனாக கே.எல்.ராகுல் ஆகியோர் செயல்படவுள்ளனர். விராட் கோலியும் இத்தொடரில், முதல்முறையாக ரோஹித்தின் கேப்டன்ஸியில் விளையாடவுள்ளார். கேப்டனாக ரோஹித் ஷர்மாவுக்கு இது முதல் ஒருநாள் தொடர் என்பதால், அவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் மேறக்கிந்தியத் தீவுகள் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அடுத்து, சில தினங்களுக்குப் பிறகு டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியும் அறிவிக்கப்பட்டது.

இத்தொடருக்காக வீரர்கள் அனைவரும் கடந்த ஜனவரி 31ஆம் தேதி, அகமதாபாத் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர். மூன்று நாட்கள் தனிமை முகாம் முடிந்த நிலையில், தற்போது கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

 இதில் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் ஆகிய மூவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், மீதமுள்ள ஐந்து பேரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை. வரும் பெப்ரவரி 6-ஆம் தேதி போட்டி தொடர் தொடங்க உள்ள நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் போட்டி நடைபெறுமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிற்ற்சியடைந்துள்ளனர்.

CORONAVIRUS, CORONA VIRUS, CRICKET PLAYERS, கொரோனா, கிரிக்கெட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்