ஐயோ, நான் ஒரு 'பொண்ணு' தாங்க...! 'ஒரு அளவுக்குத்தான் சகிச்சுக்க முடியும்...' 'இதுக்கு மேல முடியாது...' - லேடீஸ் டீம் 'கோல் கீப்பர்' எடுத்த 'அதிரடி' முடிவு...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஈரான் பெண்கள் அணி கீப்பர் சோஹ்ரே கவுடேய் மீது பாலின சோதனைக்கான சர்ச்சை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

ஐயோ, நான் ஒரு 'பொண்ணு' தாங்க...! 'ஒரு அளவுக்குத்தான் சகிச்சுக்க முடியும்...' 'இதுக்கு மேல முடியாது...' - லேடீஸ் டீம் 'கோல் கீப்பர்' எடுத்த 'அதிரடி' முடிவு...!
Advertising
>
Advertising

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கால்பந்து கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியில் ஜோர்டான் அணி மற்றும் ஈரான் அணி மோதியது.

Controversy over gender testing Iranian women's team keeper

இந்த போட்டியில் முதன்முறையாக ஈரான் கால்பந்து அணி முதல் முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஈரான் அணி பெனால்டி ஷூட் அவுட்டில் ஜோர்டானை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. நேற்று (18-11-2021) நடைபெற்ற போட்டியில் ஈரான் அணியின் தூணாக விளங்கி அணிக்கு வெற்றித்தேடி கொடுத்தவர் கோல் கீப்பர் சோஹ்ரே கவுடேய்.

Controversy over gender testing Iranian women's team keeper

ஆனால் இப்போது ஜோர்டான் கால்பந்து சங்கம், ஈரானிய மகளிர் அணியின் கோல் கீப்பர் சோஹ்ரே கவுடேய் மீது அதிகாரபூர்வ பாலின சரிபார்ப்பு சோதனை தொடங்குமாறு ஆசிய கால்பந்து கூட்டமைப்பிடம் மனு கொடுத்துள்ளது.

இதுகுறித்து ஜோர்டான் கால்பந்து சங்கத்தலைவர் அலி பின் ஹுசைன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 'ஈரான் பெண்கள் கால்பந்து அணி மீது முந்தைய காலங்களில் இருந்தே பாலின மற்றும் ஊக்கமருந்து பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது.

இப்போது சோஹ்ரே கவுடேய் மீதும் அந்த அணியில் இருக்கும் மற்ற வீராங்கனைகள் மீதும் "பாலின சரிபார்ப்பு சோதனை"  நடத்துவது கட்டாயமாக உள்ளது. இந்த சோதனை சுதந்திரமான மருத்துவ குழுவால் நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

இதற்கு கடுப்பான சோஹ்ரே கவுடேய் பதிலும் அளித்துள்ளார். 'நான் ஒரு பெண். என் மீது வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டு மிக கொடுமையானது. ஜோர்டான்  கால்பந்து சங்கம் மீது நான் வழக்குத் தொடருவேன்' எனத் தெரிவித்துள்ளார்.

ZOHREH KOUDAEI, CONTROVERSY, GENDER, IRANIAN, KEEPER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்