"என்னங்க இது??.. ஒவ்வோரு மேட்சும் இப்டி பண்ணிட்டு இருக்கீங்க??.." மீண்டும் சர்ச்சையான 'நடுவர்' முடிவு.. "கூடவே இந்தியா டீம்'க்கு இன்னொரு தலைவலி வேற!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாத்திற்கு எதிரான ஆட்டத்தில் முதல் போட்டி போன்று மீண்டும் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயண போட்டி தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி தற்போது, இங்கிலாந்து எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று வருகிறது. இதற்கு முன்பு டெஸ்ட் போட்டிகள் மட்டும் டி20 மேட்ச்கள் நடந்து தொடரை இந்தியா கைப்பற்றியது.

                                 

இன்று (26-03-2021) இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து பவுலர் டாம் கரண் வீசிய பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த ரிஷப் பன்ட் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றுள்ளார்.

அந்த பந்தை ரிஷப் பண்ட்  மிஸ் செய்தாததால் பந்து அவரது பேடில் பட்டுதுள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்து அணி அவுட்டிற்கு அப்பீல் செய்ய, அம்பயரும் உடனே அவுட் கொடுத்துள்ளார்.

அதன்பின் அந்த பந்து பவுண்டரி லைனை கடந்ததுள்ளது. உடனடியாக ரிஷப் பன்ட் DRS ரிவ்யு செய்தத்தில் டாம் கரண் வீசிய பந்து பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது போல இருந்தது. மேலும் பந்து லெக் ஸ்டம்பை தாக்கவில்லை எனவும் தெரிந்தது. உடனடியாக பன்ட் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது.

                                     

தேர்ட் அம்பயர் அவுட் இல்லையென்று சொன்னாலும், களத்தில் இருந்த அம்பயர் அவுட் என சொன்னதால் அந்த பந்துக்கு ரன் எதுவும் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் அது டெட் பால் என சொல்லப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் இணையத்தில் கேள்விகள் கேட்டும், அம்பயரின் முடிவு குறித்தும் விவாதித்து வருகின்றனர்.

அதில், 'இந்த சம்பவம் கிரிக்கெட்டுக்கு கொஞ்சம் புதிது. அம்பயரின் முடிவு பின் வாங்கப்பட்டது என்றால் பவுண்டரி கொடுத்திருக்க வேண்டும். பந்து டெட் என்றால் மீண்டும் வீசி இருக்க வேண்டும். இது உலக கோப்பை மாதிரியான மிகமுக்கிய போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதை பார்த்து உலக கோப்பை அம்பயர்கள் கற்றுக்கொள்ளமல் இருந்தால் சரி' எனவும் காரசாரமாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்