VIDEO: ‘இதெல்லாம் மன்னிக்க முடியாத தப்பு..!’ கொதித்த முன்னாள் வீரர்கள்.. போட்டியை பரபரப்பாக்கிய அம்பயரின் முடிவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கலுக்கு மூன்றாம் அம்பயர் நாட் அவுட் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஐபிஎல் (IPL) தொடரின் 48-வது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், கே.எல்.ராகுல் (KL Rahul) தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 57 ரன்களும், தேவ்தத் படிக்கல் 40 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில், பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கலுக்கு (Devdutt Padikkal) நாட் அவுட் கொடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், போட்டியின் 7-வது ஓவரை பஞ்சாப் அணியின் ரவி பிஷ்னாய் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட தேவ்தத் படிக்கல், ரிவர்ஸ் ஷாட் அடிக்க முயன்றார்.
ஆனால் பந்து பேட்டில் படாததால், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் சென்றது. பந்து பேட்டில் பட்டதுபோல் சத்தம் கேட்டதால், உடனே கேட்ச் பிடித்த அவர் அம்பயரிடம் அவுட் கேட்டார். ஆனால் களத்தில் இருந்த அம்பயர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இதனை அடுத்து மூன்றாம் அம்பயரிடம் (3rd Umpire) கே.எல்.ராகுல் ரிவியூ (DRS) கேட்டார்.
அப்போது பந்து தேவ்தத் படிக்கலின் கிளவுஸில் லேசாக உரசி சென்றது அல்ட்ரா எட்ஜில் காட்டியது. அதனால் மூன்றாம் அம்பயர் அவுட் கொடுப்பார் என பஞ்சாப் வீரரக்ள் காத்திருந்தனர். ஆனால் அதற்கு நாட் அவுட் என அறிவிப்பு வந்தது. உடனே கோபமடைந்த கே.எல்.ராகுல் கள அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மூன்றாம் அம்பயரின் முடிவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், மோசமான அம்பயரிங், தொழில் நுட்பம் அதிகமாக உதவி செய்யும் இந்த காலகட்டத்தில், இந்த மாதிரியான தவறுகள் மன்னிக்க முடியாதவை’ என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆமா, அதை ஒத்துக்கிட்டுதான் ஆகணும்’!.. தொடர் தோல்வி கொடுத்த வலி.. முக்கிய வீரர்களை ஓபனாகவே ‘குத்திக்காட்டிய’ ரோஹித்..!
- 'சச்சின் பையன்னா ஒண்ணும் சொல்ல கூடாதா?'...'20 லட்சம்னா சும்மா இல்ல'... 'சரி, அந்த மனுஷன் எவ்வளவு வேதனை படுவாரு'?... கொந்தளித்த ரசிகர்கள்!
- ‘அன்னைக்கு அஸ்வின் பண்ணது கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கல’!.. ‘ஆனா தோனி உடனே அவரை கூப்பிட்டு திட்டிட்டாரு’.. பல வருச ‘சீக்ரெட்டை’ உடைத்த சேவாக்..!
- ‘சத்தமே இல்லாம சம்பவம் பண்ணிய தோனி’!.. சிஎஸ்கே அணியில் இப்படியொரு ‘சாதனை’ படைத்த முதல் வீரர் நம்ம ‘தல’ தான்..!
- ‘வேண்டாம் சாஹா.. அது வேஸ்ட்’!.. சிஎஸ்கே ரசிகர்கள் கூட இவரை பிடிக்கலைன்னு சொல்ல மாட்டாங்க.. வில்லியம்சன் எடுத்த சூப்பர் முடிவு..!
- VIDEO: தோனியை அவுட்டாக்க முடியாத விரக்தி.. தரையை ஆக்ரோஷமாக அடித்த SRH-ன் புதுவரவு..!
- VIDEO: கடைசி ஓவர் வரை ‘பிபி’-யை எகிற வைச்ச சிஎஸ்கே.. ஆனா யாரும் எதிர்பார்க்காத மரண மாஸ் காட்டிய ‘தல’ தோனி..!
- அஸ்வின் இப்படியொரு விளக்கத்தை கொடுப்பாருன்னு யாருமே நெனச்சிருக்க மாட்டாங்க.. இதைப் படிச்சா மோர்கனே ‘மிரண்டு’ போயிருவாரு..!
- ‘இதை அவர் கிட்ட நாங்க எதிர்பார்க்கல’.. அப்பவே ஆட்டம் எங்க கையை விட்டு போயிருச்சு.. ஓபனாகவே விமர்சித்த சங்ககாரா..!
- VIDEO: ‘6 வருசமா கோலி இப்படி அவுட்டானதே இல்ல’!.. யாருப்பா அந்த பையன்..? வியந்துபோன விராட் கோலி..!