இந்தமாறி நேரத்துல வீரனுங்கல்லாம் என்ன செய்வாங்க தெரியுமா..? சிக்ஸ்க்கு முன்னாடி பாண்டியா கொடுத்த ரியாக்ஷன்..தெறி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் உடனான போட்டியில் மேட்ச் பரபரப்பான சூழ்நிலையில் இருந்தபோது இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா கொடுத்த ரியாக்ஷன் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | வீடா இல்ல சொர்க்கமா..? மகனுக்காக அம்பானி வாங்கிய சொகுசு வில்லா.. உள்ள இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

ஆசிய கோப்பை போட்டி

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் துவங்கியது. முதல் போட்டியில் இலங்கையும் ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை ருசித்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் களம்கண்டன. பொதுவாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் உலக அளவில் பரபரப்பை கிளப்புவது உண்டு. நேற்றைய போட்டியும் அப்படித்தான் அமைந்திருந்தது.

இந்தியா - பாகிஸ்தான்

துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீசுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி பவுலர்களின் அட்டகாசமான பந்துவீச்சால் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் மட்டும் தாக்குபிடித்து 42 ரன்கள் எடுத்தார். இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். ராகுல் டக்கில் வெளியேற ரசிகர்கள் சோகமடைந்தனர். இதன்பிறகு களத்தில் இறங்கி தனது 100வது டி-20யில் பேட்டிங் செய்த விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 ரன்கள் சேர்த்தார். ரோஹித் 12 ரங்களிலும், சூரியகுமார் யாதவ் 18 ரங்களுடன் வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு எகிறியது.

முடிச்சு கொடுத்த ஹர்திக்

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா (35) அவுட் ஆனார். இதனால் ரசிகர்கள் பரபரப்பின் உச்சிக்கே சென்றனர். இதனை தொடர்ந்து தினேஷ் கார்த்திக் உள்ளே வந்தார். சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை பாண்டியாவிடம் கொடுத்தார் கார்த்திக். 4 பந்துகளில் 6 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் அடுத்து வீசப்பட்ட பந்தில் பாண்டியாவால் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. அப்போது எதிர் முனையில் நின்றிருந்த கார்த்திக்கை பார்த்து பார்த்துக்கலாம் என்ற தொனியில் பாண்டியா ரியாக்ஷன் செய்தார். சொன்னதுபோலவே அடுத்த பந்திலேயே சிக்ஸர் விளாசி மேட்சை முடித்துவைத்தார்  பாண்டியா. இந்நிலையில், பாண்டியாவின் ரியாக்ஷன் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | அடுத்த வாரம் கல்யாணம்.. அப்பாவுக்கும் மணமகளுக்கும் வந்த வாக்குவாதம்.. கோவத்துல தந்தை செஞ்ச பகீர் காரியம்..!

CRICKET, HARDIK PANDYA, ASIA CUP 2022, IND VS PAK ASIA CUP 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்