‘அவங்க ரெண்ட பேர மட்டும் நம்பி இந்திய அணி இல்லை!’- ராகுல் டிராவிட்டின் அதிரடி பேச்சு; யாரைப் பற்றி சொல்கிறார்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியனில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்குகிறது.

Advertising
>
Advertising

விராட் கோலி, இந்தியாவின் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இது. இனிமேல் அவர் இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக மட்டுமே செயல்பட உள்ளார். மேலும் சீனியர் வீரர்களான அஜிங்கியே ரஹானே, செத்தேஷ்வர் புஜாரா ஆகியோர் கடந்த சில தொடர்களாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்கள்.

இதனால் இந்த தொடரில் இருவரும் ரன்கள் எடுத்தாக வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார்கள். ஒரு வேளை இருவரும் இந்த தொடரிலும் ரன்கள் குவிக்கத் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு பதிலாக ஸ்ரேயாஸ், அனுமா விஹாரி போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம் பெறக்கூடும்.

பவுலிங்கைப் பொறுத்தவரை இஷாந்த் சர்மாவுக்கும் இந்த தொடர் சவால் நிறைந்ததாகவே இருக்கும். பும்ரா, சிராஜ் போன்றோர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவருக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.

இந்நிலையில் தான் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர் குறித்துப் பேசியுள்ளார். அவர், ‘தென் ஆப்ரிக்காவில் ஒரு தொடரில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு ஒரு குழுவாக நாம் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்று அணியினரிடம் சொல்லி வருகிறேன். அனைவரும் தங்களின் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

விராட் கோலி அல்லது புஜாரா சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள் என சொல்வதற்கில்லை. எனவே இங்கு வெற்றி பெற்றாக வேண்டுமென்றால் அணியில் உள்ள டாப் 7 அல்லது 8 பேர் மிகச் சிறப்பாக விளையாட வேண்டும்.

தென் ஆப்ரிக்க சூழல் என்பது பேட்ஸ்மேன்களுக்கு மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும். இங்கு டென்னிஸ் பந்துகளில் கிடைப்பது போல பவுன்ஸ் கிடைக்கும். பந்தின் வேகமும் அதிகமாக இருக்கும். அதையெல்லாம் சமாளித்து ஆடித் தான் ரன்கள் குவிக்க வேண்டும். நாங்கள் நன்றாக பயிற்சி எடுத்துள்ளோம். எனவே அது கை கொடுக்கும்’ என்று நம்பிக்கை ததும்ப கூறியுள்ளார்.

CRICKET, RAHUL DRAVID, VIRAT KOHLI, PUJARA, TEAM INDIA, ராகுல் டிராவிட், விராட் கோலி, புஜாரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்