‘கோலியின் வாழ்க்கையில் திருப்புமுனையே இந்த முடிவுதான்..’ மனம்திறந்துள்ள பிரபல பயிற்சியாளர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணிக்குத் தானே முன்மாதிரியாக இருந்து வழிநடத்துபவர் எனப் புகழ்ந்துள்ளார் பிரபல பயிற்சியாளர் டேவ் வாட்மோர்.

சமீபத்தில், ஒரு வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கோலி பற்றிப் பேசியுள்ள டேவ் மோர், “கோலி ஒரு அற்புதமான வீரர். மற்ற கேப்டன்களை ஒப்பிடும்போது மைதானத்தில் மிகவும் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்துபவர். அவர் அண்டர் 19 காலத்திலிருந்தே அப்படித்தான். தன் அணிக்குத் தானே முன்மாதிரியாக இருந்து வழிநடத்துபவர். விளையாடும்போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும், ரத்தம் வழிந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் விளையாடிக்கொண்டிருப்பார். பயிற்சியின்போது கூட 100 சதவிகித உழைப்பைக் கொட்டும் ஒரே வீரர்.

அவர் முதல் தரப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தபோது கூட உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாவார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அனைத்தையும் கோலி தன் முயற்சியால் மாற்றியிருக்கிறார். அவர் எப்போது ஃபிட்னஸ் முக்கியம் என முடிவெடுத்தாரோ, அன்றிலிருந்து அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. அந்த முடிவே அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனை” எனக் கூறியுள்ளார்.

ICCWORLDCUP2019, VIRATKOHLI, WHATMORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்