‘நம்ம கோலியா இது..!’.. 10-ம் வகுப்பு படித்தபோது கோலியின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் அனுப்பிய Circular.. என்ன எழுதியிருக்கு தெரியுமா..? ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி பள்ளியில் படித்தபோது அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் அனுப்பிய சர்குலர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, உலக கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர் தலைமையிலான இந்தியா அணி, சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடர் மற்றும் இங்கிலாந்து தொடரில் வென்று கோப்பையை கைப்பற்றியது. அதேபோல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேரியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கேப்டனாக இருந்து விராட் கோலி வழி நடத்தி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில், இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று கோலி தலைமையிலான பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், விராட் கோலி 10-வது படிக்கும்போது 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டெல்லி அணியில் தேர்வாகியுள்ளார். மேலும் அந்த அணிக்கு கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பாராட்டும் விதமாக அவர் படித்த பள்ளியில் இருந்து விராட் கோலியின் பெற்றோருக்கு வாழ்த்து சுற்றறிக்கை (Circular) அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்