'மேட்ச் நல்லா போயிட்டு இருந்தப்போ...' திடீரென 'கிரவுண்ட்ல' நடந்த 'அந்த' அதிர்ச்சி சம்பவம்...' - கண்ணீருடன் மைதானத்தை நோக்கி ஓடிய மனைவி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

யூரோ 2020 கால்பந்து போட்டியில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவின் யூரோ கோப்பை 2020 கால்பந்துப்போட்டி கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் 2021-ஆம் ஆண்டுக்கான கால்பந்து தொடர் நேற்று முன்தினம் (11-06-2021) இத்தாலியின் ரோம் நகரில் தொடங்கியது. வரும் ஜூலை 11-ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெற இருக்கும் இத்தொடரின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (12-06-2021) நடந்தது.

நேற்றைய பிரிவில் குருப் (பி) பிரிவில் உள்ள டென்மார்க் - ஃபின்லாந்து அணிகள் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் பலப்பரீட்சை நடத்தின.

அப்போது போட்டியின் முதல் பாதி முடியும் தருவாயில் டென்மார்க்கின் முக்கிய வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்திலேயே மயங்கி சரிந்து விழுந்தார்.

இந்த சம்பவம் அங்கிருக்கும் வீரர்களையும், பார்வையாளர்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு, எரிக்சனின் மனைவி உடனடியாக தடுப்புகளைத்தாண்டி கணவரைக் காணப் பதறி ஓடிவந்தது எல்லோரையும் கண்கலங்க வைத்தது.

மயங்கி விழுந்த கிறிஸ்டியன் எரிக்சனுக்கு மைதானத்தில் இருந்தபடியே சிகிச்சையளிக்கப்பட்டு, பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பதற்றம் சற்று குறைந்த பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஆட்ட இறுதியில், யூரோ கோப்பையின் முதல் போட்டியிலேயே ஃபின்லாந்து வெற்றிபெற்று அசத்தியிருக்கிறது. ஆனால், டென்மார்க் நாட்டின் வீரர் போட்டி இடையில் மயங்கி விழுந்த சம்பவம் கால்பந்து வீரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது என்று தான் சொல்லவேண்டும்.

இந்நிலையில், இந்திய விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் அவரின் நலனுக்காக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தன்னுடைய இன்ஸ்டாகிராமில், 'நீங்கள் நன்றாக குணம் பெற்று வருவீர்கள் கிறிஸ்டியன் எரிக்சன். நாங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்... கால்பந்து போட்டி மீண்டும் உங்களை மைதானத்தில் பார்க்கும்..' எனக் கூறியுள்ளார்.

 

ஆப்கானிஸ்தானின் 'அதிரடி' ஸ்பின்னர் ரஷீத் கானும் தன் ட்விட்டரில், 'கிறிஸ்டியன் எரிக்சனைப் பற்றி படித்தேன். அவர் ஒரு உண்மையான போர்வீரன். அவர் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

 

அதோடு பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சல்லஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்