'பதுங்கி.. பாய்ந்து.. பறந்த' நொடிகள்.. மைதானத்தையே உறையவைத்த வீரரின் வைரல் கேட்ச்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

இந்தியாவுக்கு இது முதல் தோல்வியாக இருந்தாலும், இங்கிலாந்தைப் பொருத்தவரை, 1992க்கு பிறகு அதாவது 27 ஆண்டுகளுக்கு பின், உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து, தனது சொந்த மைதானத்தில் வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி விளையாண்ட 8 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 338 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. முதலில் களமிரங்கினர் ராகுல், ரோஹித் ஷர்மா இருவரும். 2வது ஓவரில் ரோஹித் ஷர்மா 2 பவுண்டரிகளை அடித்தார். இந்த ஓவரில் ஆர்ச்சர் வீசிய பந்தில் ரோஹித் கொடுத்த கேட்சை ரூட் தவறவிட்டார்.

அதன் பின்னர் கோலியும், கோலிக்கு பின்னர் ரிஷப்பும் களமிறங்கினர். விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பந்த கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். தனது முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4வது வீரராக களமிறங்கிய ரிஷப் பந்த், முதலில் ரன் ரவுட் செய்ய முனைந்து தடுமாறி தப்பித்தார்.

அதன் பின் 36வது ஓவரில் 2 பவுண்டரிகளை பந்த் எடுத்திருந்தார். அதற்குள் ரோஹித் அவுட் ஆக, ஹர்திக் வந்து சேர்ந்தார். பின்னர் 40 ஓவரில் பிளங்கெட் வீசிய பந்தை தூக்கி அடித்தார் ரிஷப். யாரும் எதிர்பாராத வகையில், பறந்து சென்று அதை வோக்ஸ் கேட்ச் பிடித்தார். இதனால் 32 ரன்களில் ரிஷப் அவுட் ஆகினார். இந்த கேட்ச் வீடியோ வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்