'அடேய்'... 'இன்னுமா இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க'... அதுவும் யாரு கிட்ட!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரோகித் சர்மாவை தென் ஆப்ரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ‘மான்கட்’ செய்யவது போல சைகை செய்தது ஆட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.
உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நேற்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி கேப்டன் டுபிளசி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். சவுத்தாம்டனில் தொடங்கிய இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே சரிவை சந்தித்தது.
அந்த அணியின் வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.இதனால் தென் ஆப்ரிக்க அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 228 ரன்கள் மட்டுமே எடுத்து.இதையடுத்து ரோகித் சர்மா, தவான் ஜோடி துவக்கம் அளித்தது.இதனைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.இதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் இந்திய சார்பில் அடித்த 26வது சதமாக அமைந்தது.
இதனிடையே போட்டியின் 7வது ஓவரை தென் ஆப்ரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் வீசினார். அப்போது பந்தை வீச வந்த மோரிஸ் திடீரென பந்தை வீசாமல் நின்றார். பின் மீண்டும் பவுலிங் செய்ய சென்ற மோரிஸ், பவுலர் முனைக்கு சென்ற போது ரோகித் சர்மாவை ‘மான்கட்’ செய்வது போல ஸ்டெம்பில் தட்ட பந்தை கொண்டு சென்றார்.இது மைதானத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் அஷ்வின் செய்த மான்கட் அவுட்டை இன்னும் யாரும் மறக்கவில்லை என, ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தல’ இருக்கும் போது இதலெல்லாம் ஏன் பாஸ் பண்றீங்..! வைரலாகும் தோனியின் ஸ்டெம்பிங் வீடியோ!
- ‘ஆரம்பமே அதகளம் பண்ணிய இந்தியா’.. அடுத்தடுத்து 2 முக்கிய விக்கெட்டை தூக்கி தென் ஆப்பிரிக்காவை கதறவிட்ட பும்ரா!
- 'எங்க போனாலும்'...'சென்னை'யை அடிச்சிக்க முடியாது மச்சி'...தெறிக்க விட்ட தினேஷ் கார்த்திக்!
- 'அவர ஓப்பனிங் பேட்ஸ்மேனா களமிறக்குங்க'... 'இல்லனா, மரத்தில் ஏறி பயங்காட்டிய ரசிகர்'!
- 'ஏம்பா கடைசியில இப்டி ஆகிடுச்சே'... 'அதிரடி காட்டிய ஐ.சி.சி.'!
- 'சாதனை படைப்பாரா இந்திய வீரர்?'... ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
- ‘இனிமேல் இவர் விளையாடமாட்டார்’.. காயத்தால் உலகக்கோப்பை தொடரைவிட்டு விலகிய நட்சத்திர வீரர்..!
- ‘உங்க நாட்லயே உலகக் கோப்பைய தொட்டுப் பார்த்த ஒரே ஆள்..’ தென் ஆப்பிரிக்காவைக் கலாய்த்த இந்திய ரசிகர்..
- ‘அடிமேல் அடி வாங்கும் இலங்கை’.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றி மாஸ் காட்டிய ஆஃப்கான் வீரர்!
- ‘இப்பவே இப்டினா நாளைக்கு சொல்லவா வேணும்’.. ஸ்டேடியத்தை தாண்டிய ‘தல’யின் வைரல் ஷாட்!