ஒருகாலத்துல 'எப்படி' வாழ்ந்த மனுஷன்...! இன்னைக்கு ஊரே 'தலை'யில தூக்கி வச்சு கொண்டாடுது...! 'இதெல்லாம் அவ்ளோ ஈஸி இல்ல...' - பின்னாடி மிகப்பெரிய தியாகம் இருக்கு...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஸ்காட்லாந்து வீரர் கிறிஸ் கிரேவ்ஸ் குறித்த வியக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஓமான், அல் அமீரட்டில் நடந்த நேற்று (17-10-2021) டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று பி பிரிவு போட்டியில் வங்கதேசத்துக்கு ஷாக் கொடுத்து ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது.  இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஸ்காட்லாந்து வீரர் கிறிஸ் கிரேவ்ஸ் அமேசான் நிறுவனத்தில் பார்சல் டெலிவரி பாயாக பணியாற்றியவர். நேற்றைய ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக கிறிஸ் கிரீவ்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 53 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தத்தளித்தது. அதற்கு அடுத்ததாக களம் இறங்கிய கிறிஸ் கிரேவ்ஸ் 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்ததோடு, மார்க் வாட் (22 ரன்கள்) என்ற வீரருடன் சேர்ந்து 51 ரன்களை 7-வது விக்கெட்டுக்காகக் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இந்த நிலையில் அதிரடியாக 140 ரன்களை ஸ்காட்லாந்து குவித்தது.

பிறகு வங்கதேசம் பேட் செய்த போது 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் ஷகிப் அல் ஹசன் (20 ரன்கள்), முஷ்பிகுர் ரகீம் (38 ரன்கள்) ஸ்கோரை 65 ரன்களுக்குக் கொண்டு சென்ற போது  பவுலிங் வீச வந்த கிறிஸ் கிரேவ்ஸ் தன் அட்டகாசமான பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுகளையும் தூக்க வங்கதேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

உள்நாட்டில் குழி பிட்சை போட்டு அனைவரையும் தோற்கடிக்கும் பாம்பு டான்ஸ் அணி வெளியில் வந்தால் மண்ணை கவ்வுவது தொடர் கதை தான். ஆனால் ஸ்காட்லாந்திடம் சரண்டர் ஆனது அமேசான் பார்சல் டெலிவரி ஊழியர் கிறிஸ் கிரீவ்ஸினால் என்பதுதான் அல்டிமேட் தகவல்.

இவரைக் குறித்து ஸ்காட்லாந்து கேப்டன் கைல் கொயட்சர் கூறுகையில், சில தினங்கள் முன்பு வரை அமேசான் நிறுவன பார்சல் டெலிவரி ஓட்டுநர், உலகக்கோப்பைக்காக தயாரிப்பில் ஈடுபட்ட போது 2 மாதங்களுக்கு முன்னால் கிறிஸ் கிரீவ்ஸ் முழு ஆர்வத்துடன் கிரிக்கெட்டில் முழு வீச்சில் பயிற்சி எடுத்தார்.

கிறிஸ் கிரீவ்ஸ் குறித்து பெருமையாக உள்ளது. அவர் உண்மையில் நிறைய தியாகம் செய்துள்ளார். அமேசான் டெலிவரி டிரைவரிலிருந்து இன்று ஆட்ட நாயகன் என்றால் சும்மா கிடையாது. கிரீவ்ஸ் ஒப்பந்த வீரர் அல்ல. மிகவும் கடுமையாக உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளார்.

ஒரு மாதத்திற்க்கு முன்பு வரை அவர் போட்டிகள் எதிலும் பெரிதாக ஆடவில்லை. அசோசியேட் அணிகளில் தரமான வீரர்கள் இருப்பதை இதுவே அறிவுறுத்துகிறது. அவர்களுக்கான களம், வாய்ப்பு அமைந்தால் தான் யார் என நிரூபிப்பார்கள்.” என்று கொயெட்சர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்