‘புதிய உலக சாதனை படைத்த கிறிஸ் கெயில்..’ பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

யுனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயில் இன்றைய ஆட்டத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

தொடக்க வீரரான இவர் அதிரடி ஆட்டத்தால் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர். ஒவ்வொரு ஆட்டத்திலும் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பவர். உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் கெயில் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோர் 37 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்தனர். இதில் டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பையின் இரண்டாவது ஆட்டத்தில் ஹசன் அலி பந்து வீச்சில் கெயில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் இவர் உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த ஆட்டத்தில் கெயில் 34 பந்துகளில் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெயில் இரட்டை சதம் அடித்தார். அந்தப் போட்டியில் மொத்தமாக 16 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் வரிசையிலும் முதலிடத்தில் உள்ளார்.

ICCWORLDCUP2019, PAKVSWI, CHRISGAYLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்