‘அது மொத்த கிரிக்கெட் உலகத்துக்குமே சோகமான நாள்’.. ‘10 ரன்னில் மிஸ் ஆன சாதனை’.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் கெய்ல் ஓய்வு பெறுவது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை லீக் சுற்றில் நேற்று நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாய் ஹோப் 77 ரன்களும், எவின் லீவிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகிய இருவரும் 58 ரன்கள் அடித்தனர்.

இதனைத் தொடர்ந்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ஆனால் இரு அணிகளும் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டியுடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் சாய் ஹோப்,  ‘அவர் ஓய்வு பெற்றால் மொத்த கிரிக்கெட் உலகிற்கும் பெரும் இழப்பாக அமையும். அது கிரிக்கெட்டுக்கு சோகமான நாளாக இருக்கும்’ என தெரிவித்திருந்தார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் ப்ரைன் லாராவின்(ஒருநாள் போட்டியில் 10,348) சாதனை முறியடிக்க கெயிலுக்கும்(10,338) சில ரன்களே உள்ளன. அதனால் கெய்ல் மீண்டும் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.

ICCWORLDCUP2019, GAYLE, BRIAN LARA, ODI, RECORD, MENINMAROON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்