ஜிம்மில் வொர்க் அவுட் மோட்.. “அடுத்த வருச IPL-ல பார்ப்போம்”.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டி20 லெஜண்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர் கிறிஸ் கெய்ல் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் மும்பை, புனே ஆகிய மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று (31.03.2022) மும்பை மைதானத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் லக்னோ, குஜராத் என்ற 2 புதிய அணிகள் இணைந்துள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்கள் வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் பல இளம் வீரர்களுக்கும், வெளிநாட்டு வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் பல முன்னணி வீரர்களும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அந்த வகையில் டி20 கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யவில்லை. அதனால் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிறிஸ் கெயில், அடுத்த ஐபிஎல் தொடருக்கு ரெடியாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக கிறிஸ் கெயில் விளையாடி உள்ளார். அதில் பல இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு எதிரணியை மிரள வைத்துள்ளார். குறிப்பாக 2011-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 175 ரன்கள் விளாசி ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளையும் திரும்பி பார்க்க வைத்தார். அதுமட்டுமல்லாமல்  அதிக சிக்சர், அதிக அரைசதம் என ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்த சூழலில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளவுள்ளதாக கிறிஸ் கெய்ல் கூறியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

IPL, CHRISGAYLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்