"தோனி கேப்டன்சில ஆட யாருக்கு தான் ஆசை இருக்காது".. பென் ஸ்டோக்ஸ் CSK-வில் இணைந்ததும் கெயில் சொன்ன சூப்பர் தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் நடைபெற்றது.
இந்த மினி ஏலத்தில் ஏராளமான வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதில், சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார். இது ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிக தொகையாகவும் பார்க்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது அதிகபட்சமாக உள்ளது. மேலும் மும்பை அணி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்த வீரராகவும் மாறி உள்ளார் கேமரூன் க்ரீன் மாறி உள்ளார். இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
மிக முக்கியமான வீரர் சென்னை அணியில் இணைந்துள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக, ஐபிஎல் தொடரில் தோனியுடன் இணைந்து புனே அணியில் ஆடி இருந்தார் பென் ஸ்டோக்ஸ். அதன் பின்னர், தற்போது மீண்டும் தோனியுடன் இணைந்து சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்டோக்ஸ் பெரிய அளவில் பங்கு வகிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம் பிடித்தது குறித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் என்றால் நம் நினைவுக்கு முதலில் வருவது நிச்சயம் கெயில் தான். பல அதிரடி இன்னிங்ஸ்களை ஆடி அசத்தி உள்ள அவர், கடந்த சீசனுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனிடையே, தற்போது பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்தது குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
"சிஎஸ்கே அணியில் இடம் பிடித்ததால் நிச்சயம் பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சி அடைவார். ஒவ்வொரு வீரரும் தோனி தலைமையின் கீழ் விளையாட விரும்புகிறார்கள். அனைவரும் அவரை விரும்புகிறார்கள்" என தெரிவித்துள்ளார். அதே போல, சிறந்த ஆல் ரவுண்டராக சிஎஸ்கே அணியில் ஸ்டோக்ஸ் திகழ்வார் என்றும் தோனி பின்னால் இருந்து தனது வேலைகளை ஸ்டோக்ஸ் சிறப்பாக செய்வார் என்றும் தெரிவித்த கெயில், இளம் வீரர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்வார் என்றும் கூறி உள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அடேங்கப்பா".. பென் ஸ்டோக்ஸ் அணியில் இணைந்ததும் CSK-வில் நடந்த அற்புதம். "இத யாரும் எதிர்பார்க்கலையே"
- பென் ஸ்டோக்ஸ்-ஐ தட்டித் தூக்கிய CSK.. அணிக்குள் வந்ததும் ஆல் ரவுண்டர் போட்ட அசத்தல் ட்வீட்!! போடுறா வெடிய 🔥🔥!!
- IPL 2023 : "சார் இந்த தடவ சென்னை".. ரசிகர் கேட்ட கேள்விக்கு தோனி சொன்ன பதில்.. வைரல் வீடியோ!!
- மேட்ச் முடிஞ்ச அப்புறம் கைகுலுக்க போன ஸ்டோக்ஸ்.. விலகிப்போன பாக். வீரர்.. என்ன ஆச்சு?.. வீடியோ..!
- சாம்சன் விஷயத்தில்.. தோனி ஸ்டைலில் ட்ரிக்கா பதில் சொன்ன ஹர்திக்.. அஸ்வின் கொடுத்த வேற லெவல் பாராட்டு!!
- ஆல் ஏரியாலயும் அய்யா 'கில்லிடா'.. டென்னிஸ் களத்தில் MS தோனி.. வைரல் புகைப்படங்கள்!!
- "என்னப்பா ஒரு ரவுண்டு போவோமா?".. ருத்துராஜ், கேதார் ஜாதவுடன் புது காரில் வலம் வந்த தோனி.. வைரல் வீடியோ!!
- "ஜடேஜாவ இதுனால தான் சிஎஸ்கே 'Retain' பண்ணாங்க".. அஸ்வின் போட்ட கணக்கு.. "கூட்டி கழிச்சு பாத்தா கரெக்ட்டா இருக்கே"
- உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து.. கேப்டன் பட்லருக்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்சன் இருக்கா? செம்ம
- T20 WC2022: "2016 Finals தோல்விக்காக விமர்சிக்கப்பட்டவர்.. இப்போ ஒத்த ஆளா நின்னு ஜெயிக்க வச்சுருக்காரு"! மெச்சும் ரசிகர்கள்! Ben Stokes