'எவ்வளவு வேகமாக ஓடிய கால்கள் இது'... 'கிரிக்கெட் ஜாம்பவானுக்கு நேர்ந்த சோகம்'... மருத்துவர்களின் அறிவிப்பால் அதிர்ந்துபோன கிரிக்கெட் உலகம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் உடல்நிலை குறித்து வெளிவந்துள்ள தகவல் மொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிரிக்கெட் உலகில் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருந்த கிறிஸ் கெய்ர்ன்ஸ் அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தார். அவருக்கு இதயத்திலிருந்து இரத்தம் செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் திடீரென மயங்கி விழுந்தார். 51 வயதான கிறிஸ் கெய்ர்ன்ஸ்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிட்னி மருத்துவமனை கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ் கெய்ன்ஸ் உயிர்காக்கும் கருவிகளிலிருந்து விடுதலை பெற்றார் என்றும் உடல் நிலை தேறி தன் குடும்பத்தினரிடம் கெய்ன்ஸ் பேசினார் என்றும் கூறியுள்ளது. இதனையடுத்து கிறிஸ் கெய்ர்ன்ஸ் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே அவரது வழக்கறிஞரான ஆரோன் லாயட் "உயிர் காக்கும் சிகிச்சையின்போது, முதுகுத் தண்டில் அவருக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டது. இதனால் அவரது கால்கள் செயலிழந்துவிட்டது. இதன்காரணமாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிறந்த முதுகு தண்டு சிகிச்சை மையத்தில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இப்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்துக்குத் துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்