'பாஜியை நினைத்து உடைந்து போன ரசிகர்கள்'... 'கபில்தேவ்வின் நண்பர் பகிர்ந்த புகைப்படம்'... நிம்மதி அடைந்த ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளார்கள்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 61 வயதான அவருக்கு மாரடைப்பு என்ற செய்தியைக் கேட்ட பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கபில்தேவ்வின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கபில்தேவ் உடல்நிலை சரியாகி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பிராத்தனையில் ஈடுபட்டார்கள். சச்சின் உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரும்  கபில்தேவ் விரைவில் நலம் பெற வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்கள். இந்த சூழ்நிலையில் அவர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாகக் கையை உயர்த்திக்காட்டிப் புன்னகைக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிவித்துள்ளது. இந்திய அணியில் 1978ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை விளையாடிய கபில்தேவ், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரைப் பெற்றுக்கொடுத்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்