"இறந்து போன என் அப்பாவுக்காக.." முக்கிய விக்கெட்டை எடுத்ததும்.. மைதானத்தில் இளம் வீரர் செய்த விஷயம்.. உருகிய ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று (29.04.2022) நடைபெறவுள்ள போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | திருமண நிகழ்ச்சியில் கேட்ட துப்பாக்கி சத்தம்.. வேகமாக அறைக்குள் சென்ற மர்ம நபர்??.. கண்ணீர் விட்ட குடும்பம்

முன்னதாக, நேற்று நடந்து முடிந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்த டெல்லி கேப்பிடல்ஸ், புள்ளிப் பட்டியலிலும் முன்னேற்றம் கண்டிருந்தது.

அதே போல, இதுவரை 9 போட்டிகளை ஆடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
சிக்கலில் கொல்கத்தா அணி..

அதிலும் குறிப்பாக, முதல் நான்கு போட்டிகளில், மூன்றில் வெற்றி கண்டிருந்த கொல்கத்தா, அதன் பிறகு தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்து, சிக்கலில் உள்ளது. கொல்கத்தா அணியில் பல சிறந்த வீரர்கள் உள்ள போதும், அதில் பலரும் ஃபார்மில் இல்லாமல் இருப்பது, அணியின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பலே ஃபார்மில் குல்தீப்..

இன்னும் ஐந்து போட்டிகள் கொல்கத்தா அணிக்கு மீதமுள்ள நிலையில், அனைத்திலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திலும் அவர்கள் உள்ளனர். அப்போது தான், பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த இரண்டு லீக் போட்டிகளிலும், டெல்லி வீரர் குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

களமிறங்கிய சகாரியா..

அதே போல, நேற்றைய போட்டியில், டெல்லி அணிக்காக இளம் வீரர் சேத்தன் சகாரியா அறிமுகமாகி இருந்தார். இவர் கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி இருந்தார். தொடர்ந்து, கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பின்ச்சை தன்னுடைய முதல் ஓவரில் போல்டு எடுத்திருந்தார் சகாரியா.

நடப்பு ஐபிஎல் தொடரில் தான் வீசிய முதல் ஓவரிலேயே முக்கிய விக்கெட்டை எடுத்த சகாரியா, தன் கைகளை குறுக்காக வைத்து, நெற்றியில் இரண்டு விரல்கள் வைத்தபடி, 'Dragon Ball Z' ஸ்டைலில் இதனைக் கொண்டாடினார். பலரும், சகாரியாவின் விக்கெட் கொண்டாட்டம் பற்றி இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.

என்னோட அப்பாவுக்காக..

தொடர்ந்து, போட்டிக்கு பின்னர் 'Dragon Ball Z' ஸ்டைலில், தான் விக்கெட் எடுத்ததை கொண்டாடியதற்கான காரணம் என்பது பற்றி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் சகாரியா. "இது மிகவும் எமோஷனலான கொண்டாட்டம். இது என்னுடைய தந்தைக்கு வேண்டி நான் செய்தேன். ஒரு சர்வதேச பேட்ஸ்மேனை நான் அவுட் எடுக்க வேண்டுமென எப்போதும் அவர் விரும்புவார்" என உருக்கமாக தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு, ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆட வேண்டி, சேத்தன் சகாரியா தேர்வாகி இருந்தார். அந்த சமயத்தில், கொரோனா மூலம் பாதிக்கப்பட்டிருந்த அவரின் தந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து, கடினமாக உழைத்து இன்று ஐபிஎல் வரை வந்துள்ள மகனின் சாதனைகளைக் காண தந்தை இல்லை என்பதை நினைத்து பலரும்  உருக்கமுடன் கருத்தினை வெளியிட்டு வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, CHETAN SAKARIYA, DRAGON BALL, PBKS VS LSG, IPL 2022, DRAGON BALL Z, ஐபிஎல், சகாரியா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்