"'ஐபிஎல்' விளையாட 'சான்ஸ்' கெடச்சதும்... இனிமே எல்லாம் நல்லதா தான் நடக்கும்ன்னு நெனச்சேன், ஆனா.." 'இளம்' வீரரின் குடும்பத்தில் நடந்த 'சோக' நிகழ்வு!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்த நிலையில், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு, கொரோனா தொற்று உறுதியான காரணத்தினால், பாதியிலேயே இந்த தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள போட்டிகள், வேறு நாடுகளில் நடத்தலாமா என பிசிசிஐ திட்டமிட்டு வரும் நிலையில், மற்ற ஐபிஎல் தொடர்களை போல, இந்த தொடரிலும் பல இளம் வீரர்கள், தங்களது ஆட்டத்திறனால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் அதிக கவனம் பெற்றிருந்தனர்.

இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியா (Chetan Sakariya), தோனி உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளை எடுத்து, ஐபிஎல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த சேத்தன் சக்காரியா, ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணத்தினால், தனது சொந்த ஊர் திரும்பியிருந்தார்.

மேலும், சில தினங்களுக்கு முன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்தார்.  சக்காரியாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 1.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்த நிலையில், இதில் ஒரு பகுதி சம்பளம் சில தினங்களுக்கு முன், சக்கரியாவிற்கு கிடைத்தது. இந்த பணத்தைக் கொண்டு, தந்தைக்கு சிறப்பான சிகிச்சை அளித்து அவரை மீட்பேன் என சமீபத்தில் கூறியிருந்தார்.

ஆனால், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை வந்த சக்காரியாவின் தந்தை, இன்று உயிரிழந்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் சக்காரியா தேர்வாவதற்கு முன், அவரின் இளைய சகோதரர் தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்ந்து, ஐபிஎல் மூலம் தனது வாழ்நாளில் நிகழ்ந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி, ஒரு படி மேலே உயர்ந்து வந்த நிலையில், தற்போது அவரது தந்தை உயிரிழந்துள்ளது, இளம் வீரர் மற்றும் அவரது குடும்பத்தினரை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்