சிவனேன்னு 'பவுண்டரி' லைன் கிட்ட 'ஃபீல்டிங்' நின்ன 'மொயீன் அலி'... "அந்த மனுஷன கூப்ட்டு என்னய்யா கேட்டு வெச்சுருக்கீங்க??..." 'சென்னை' ரசிகர்கள் கேட்ட 'விஷயம்'.. வைரல் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், நேற்று ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது போட்டியில், ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்றிற்கு பிறகு ரசிகர்கள் மைதானத்திற்கு வந்ததால், இந்திய அணி பவுண்டரிகள் மற்றும் ரன்கள் அடிக்கும் போது, கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, பவுண்டரி லைனுக்கு அருகே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள், மொயீன் அலியை அழைத்து, 'அலி பாய், எங்களுக்கு வலிமை பட அப்டேட் வேண்டும்' என கேட்டனர். இதனைக் கேட்ட மொயீன் அலி, என்னவென்று தெரியாமல் சிரித்தார்.

 

ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 'வலிமை' படத்தின் ஷூட்டிங், கொரோனா தொற்று காரணமாக தள்ளிப் போனது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்த எந்த அப்டேட்டும் படக்குழு தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை. இதனால், அஜித் ரசிகர்கள் அடிக்கடி வலிமை அப்டேட் தொடர்பான ஹேஸ்டேக்குகளை அவ்வப்போது டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது, வலிமை அப்டேட் குறித்து எதுவும் தெரியாத இங்கிலாந்து வீரர் மொயீன் அலியிடமும், அஜித் ரசிகர்கள் கேட்டுள்ளது தொடர்பான வீடியோ, அதிகம் வைரலாகி வருகிறது.

 

அது மட்டுமில்லாமல், இந்த போட்டியில் 'We want valimai update' என்ற பதாகைகளையும் ரசிகர்கள் கையில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்