‘கொரோனாவுக்குப் பின் முதன்முறையாக நடக்கும் போட்டி’... ‘அதுவும் சென்னையில் தான் பர்ஸ்ட்’... ‘பிசிசிஐ வெளியிட்ட அட்டவணை’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
கொரோனாவுக்குப் பின் முதன்முதலாக இந்தியாவில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து, 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர்களில் விளையாட இரண்டு நாட்டின் கிரிக்கெட் போர்டுகளும் ஒப்புக்கொண்டன. இதற்காக அந்த அணி தனது இலங்கை டெஸ்ட் தொடர் முடிந்ததும் அங்கிருந்து நேரடியாக ஜனவரி 27-ந் தேதி சென்னை வந்தடைகிறது.
இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டிகள் அனைத்தும் சென்னை, அகமதாபாத், புனே ஆகிய மூன்று மைதானங்களில் மட்டுமே நடக்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் பிப்ரவரி 5-ந் தேதி தொடங்குகிறது. அதன்பின் 2-வது போட்டியும் சென்னையில்தான் நடக்கிறது. இந்த போட்டி 13-ந் தேதி தொடங்குகிறது. அதன்பின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான மொதேரா மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24-ந் தேதி தொடங்குகிறது. அதன்பின் மார்ச் 4-ந் தேதி 4-வது மற்றும் கடைசி போட்டி இது மைதானத்தில் நடக்கிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து 4 போட்டிகளும் இதே மைதானத்தில்தான் நடக்கிறது. 2-வது போட்டி மார்ச் 14, 3-வது போட்டி மார்ச் 16, 4-வது போட்டி மார்ச் 18, ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மார்ச் 20-ந் தேதியும் நடக்கிறது.
அதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேயில் மார்ச் 23-ந் தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி மார்ச் 26-ந் தேதியும், 3-வது போட்டி 28-ந் தேதியும் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டெஸ்ட் போட்டி கடைசியாக 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்தது. அதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு இப்போது தான் மீண்டும் டெஸ்ட் போட்டி நடக்க இருக்கிறது. ரசிகர்களை மைதானத்தில் அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
‘தமிழகத்தில் முதல்கட்டமாக ’... ‘இத்தனை லட்சம் பேருக்கு’... ‘கொரோனா தடுப்பூசி’... வெளியான தகவல்...!!!
தொடர்புடைய செய்திகள்
- 'நாங்க இந்த தேதில கண்டிப்பா...' 'கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போட ஸ்டார்ட் பண்றோம்...' - அதிரடியாக அறிவித்த நாடு...!
- 'தமிழகத்தின் இன்றைய (10-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- ‘பேட்டிங் ஃபார்மில் செமையாக இருந்தும்’... ‘டெஸ்ட் போட்டியில் இல்லாத ஆல்ரவுண்டர்’... ‘வெளியான உண்மையான காரணம்’...!!!
- 'கொரோனாவா அப்படின்னா???'... 'இதுவரைக்கும் ஒருத்தருக்குகூட பாதிப்பில்ல!!!'... 'மாஸ்க், சானிடைசர்னு எதுவுமே கிடையாது!!!'... 'இந்தியாவுல இன்னும் இப்படி ஒரு இடமா?!!'...
- "இனிதான் நடராஜனுக்கு சிக்கலே இருக்கு... இதுல மட்டும் கவனமா இல்லன்னா"... 'குவியும் பாராட்டுகளுக்கு நடுவே'... 'எச்சரித்துள்ள சேவாக்!!!'...
- ‘தனி ஒருவரை சார்ந்து மட்டுமே அணி இல்ல’... ‘இந்த நேரத்தை இளைஞர்கள் யூஸ் பண்ணிக்கனும்’... ‘கிரிக்கெட் ஜாம்பவான் கருத்து’...!!!
- 'ஐபிஎல்லுக்கு தயாராகும் ரெய்னா?!!'... 'வெளியான திடீர் அறிவிப்பால்'... 'எதிர்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள்!!!'...
- 'ஒன்பது மாதங்களாக பெண் ஒருவர் அனுபவித்த வேதனை’... ‘முயற்சியை விடாமல்’... ‘சிகிச்சை அளித்து வெற்றி கண்ட மருத்துவர்கள்’...!!!
- நடராஜனிடம் 'இத' கவனிச்சீங்களா?.. 'மேட்ச்'ல அவரு அசத்துறதுக்கு... இது தான் காரணம்!.. புகழ்ந்து தள்ளிய சக வீரர்கள்!.. சீக்ரெட்டை உடைத்த கேப்டன் கோலி!
- ‘டி20 தொடரை கைப்பற்றிய கையோடு’... ‘ஐசிசி தரவரிசையில் முன்னேறிய இரு வீரர்கள்’... ‘ஆனால் இதுல யாருமே இடம்பெறல’... ‘வெளியான தகவல்’...!!!