'சென்னை சூப்பர் குயின்ஸ்'-க்கு 'லவ்' விசில் அடிங்க!.. தெறிக்கவிட்ட சிஎஸ்கே அணி!.. உங்களை Bowled ஆக்கியது யார்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இணையத்தில் கடந்த சில நாட்களாக 'ஃபேஸ் ஆப்' பயன்படுத்தி ஆணைப் பெண்ணாக மாற்றி, அதே போல பெண்ணை ஆணாக மாற்றி பகிரப்படும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதனை பல முன்னணி பிரபலங்களும் தங்களது சமூக வலைத்தளங்களில் இந்த ஃபேஸ் ஆப் புகைப்படங்கள் மூலம் நிரப்பி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை அணியின் வீரர்களை 'ஃபேஸ் ஆப்' செய்து பதிவிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் புகைப்படம் அனைத்தையும் பெண்களாக மாற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த ட்விட்டில், "சென்னை சூப்பர் குயின்ஸ்களுக்கு (ராணிகளுக்கு) உங்கள் அனைவரது அன்பும் தேவைப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் ரகளையாக விளையாடி வருகின்றனர்.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்