‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’!.. 7 வருசமாக எந்த அணியும் எடுக்காத வீரரை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே.. அரங்கம் அதிர எழுந்த ‘கைத்தட்டல்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் சீசனில் கடந்த 7 வருடங்களாக எந்த அணியும் ஏலத்தில் எடுக்காத வீரரை சிஎஸ்கே எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமாக விளையாடியது. அதனால் முதல் முறையாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் சென்னை அணி அப்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இதனை அடுத்து ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன் போன்ற மூத்த வீரர்களை அணியிலிருந்துசிஎஸ்கே விடுவித்தது. மேலும் சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்த நிலையில் சென்னையில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து வீரர் மொயின் அலியை சென்னை அணி ரூ.7 கோடி கொடுத்து முதலில் ஏலத்தில் எடுத்தது. இதனை அடுத்து ஆல்ரவுண்டரான கிருஷ்ணப்பா கவுதமை ரூ.9.25 கோடிக்கு எடுத்தது.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரவை சென்னை அணி ரூ.50 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் கடைசியாக 2014ம் ஆண்டு பஞ்சாப் அணியின் சார்பாக விளையாடினார்.

இதனை அடுத்து கடந்த 7 வருடங்களாக அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. தற்போது சிஎஸ்கே அவரை ஏலத்தில் எடுத்ததால், மற்ற அணி நிர்வாகிகளும் கைத்தட்டி வரவேற்றனர். மேலும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் சென்னை அணியை பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்