'உலகக்கோப்பை வெற்றியை சரியாக கணித்த 'ஜோதிடர்'... 'தோனி'யின் ஓய்வு குறித்து பரபரப்பு தகவல்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே, யார் உலகக் கோப்பையை வெல்லுவார் என்பது குறித்து சரியாக கணித்து தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பவர் ஜோதிடர் பாலாஜிஹாசன். அவர் தற்போது தோனியின் ஓய்வு குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. இந்த போட்டிகள் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்ற ஜோதிடர் பாலாஜிஹாசன், யார் கோப்பையை வெல்லுவார் என மிகச் சரியாக கணித்திருந்த வீடியோ, தற்போது வைரலாக பரவி வருகிறது. அவர் அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்த அனைத்தும் உலகக் கோப்பையில் நடந்திருந்தது. இதனால் சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக அவர் பேசிய வீடியோ தான் ட்ரெண்டிங்யில் இருந்தது.
இதனிடையே தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து அவர் தற்போது கணித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் '' தோனியின் ஜாதகப்படி லக்கினாதிபதி தனுசு இருப்பார். அந்த தனுசு ராசியில் இருக்கும் லக்கினாதிபதியே வரும் அக்டோபரில் குரு பெயர்ச்சி ஆகிறார். 2019 குரு பெயர்ச்சிக்கு பின்னர் இந்தாண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் ஓய்வறிவிப்பார். அல்லது அடுத்த வருடம் அக்டோபரில் தொடங்கும் 2020 டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் தனது ஓய்வை அறிவிப்பார். தோனியின் ஜாதகப்படி தற்போது ஓய்வை அறிவிக்க வாய்ப்பில்லை'' என ஜோதிடர் பாலாஜிஹாசன் தனது கணிப்பில் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இவரு கேப்டன்ஷிப்ல கோப்பையை ஜெயிச்சிடக் கூடாதுனுதான்.. அவரு இப்படி ஆடுனாரு'.. பிரபல வீரரின் தந்தை!
- ‘அவரு இது எங்களுக்கு வேண்டானுதான் சொன்னாரு..’ இறுதிப் போட்டி குறித்து மனம்திறந்துள்ள பிரபல வீரர்..
- ‘அடுத்த கேப்டனா இவர் கரெக்டா இருப்பாரு’.. கருத்து கூறிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்..!
- ‘ரசிகர்கள் நெனச்சத அப்படியே சொல்லியிருக்காரு..’ வைரலாகும் ரவி சாஸ்திரியின் ட்வீட்..
- 'இது லிஸ்ட்லயே இல்லயே?'.. வயசானப்புறம் கிரிக்கெட் வீரர்கள் எப்படி இருப்பாங்க?.. தத்ரூப படங்கள்!
- ‘தோனி அணியில் இருப்பார் ஆனால்..’ ஓய்வு குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்..
- உலகக்கோப்பைக்குபின் ஐசிசி வெளியிட்ட முக்கிய பட்டியல்..! முதல் இடம் பிடித்து அசத்திய 2 இந்திய வீரர்கள்..!
- 'Excuse me.. வாட் ஈஸ் தி புரொசிஜர்?'.. HEAD COACH-க்கு BCCI முன்வைத்துள்ள 'தகுதிகள்'!
- ‘பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி’... ‘சச்சின் கூறிய கருத்து’!
- ‘சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐசிசி..’ இறுதியாக அளித்துள்ள விளக்கம்..