‘தோனி ரசிகர்’.. நம்ம ‘சென்னை’ பையனுக்கு நியூசிலாந்து கிரிக்கெட்டில் கிடைத்த ‘மரண மாஸ்’ அங்கீகாரம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து நாட்டில் ஸ்கோரர் குழுவில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Advertising
>
Advertising

சென்னையை சேர்ந்தவர் அருண்குமார் மாணிக்கவாசகம் (வயது 30 ). 10-ம் வகுப்பு வரை இங்கு படித்தவர், கர்நாடகாவில் உள்ள மணிபால் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் மும்பையில் உள்ள ஐஐடியில் இன்டர்ன்ஷிப் செய்தார். இதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு நியூசிலாந்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் Ph.D பட்டம் பெற்றார்.

தோனியின் ரசிகரான இவர், கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தில் நியூசிலாந்து கிளப் அணிகளில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதனை அடுத்து 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பால் பாயாக செயல்பட்டார். அப்போது கிடைத்த நண்பர்களின் மூலம் நியூசிலாந்தில் உள்ள ஒரு கிரிக்கெட் கிளப்பில் பால் ஸ்கோரர் வேலை அவருக்கு கிடைத்துள்ளது. அதாவது போட்டியின்போது மைதானத்தில் உள்ள டிஜிட்டல் பலகையில் ஸ்கோரை மாற்ற வேண்டும். இந்த வேலை அவருக்கு பிடித்துப் போயிள்ளது. அதனால் வாரத்தில் சனிக்கிழமை நாட்களில் இதை பகுதிநேர வேலையாக செய்து வந்துள்ளார்.

இந்த சூழலில் 2018-ம் ஆண்டு நடந்த U19 உலகக்கோப்பை தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்கோரர் வரவில்லை. அதனால் அவசரம் அவசரமாக அருண்குமார் அந்த பணிக்கு நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து முழுநேரப் பணியாக இது அவருக்கு மாறியது.

ஒவ்வொரு நாட்டிலும் அம்பயர்களுக்கு என்று தனியாக சங்கம் உள்ளது. அதேபோல் ஸ்கோரர்களுக்கும் தனியாக சங்கம் உள்ளது. அதன்படி நியூசிலாந்து கிரிக்கெட் ஸ்கோரர் சங்கத்தில் அருண்குமார் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் நியூசிலாந்து கிரிக்கெட் ஸ்கோரர் சங்கத்தில் இடம்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, NEWZEALANDCRICKET, ARUNMANICKAVASAGAM, CHENNAI, SCORER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்