‘உலகக்கோப்பையில் ஜெயிக்குற டீம் இதான்.. சரித்திரத்த கொஞ்சம் பொரட்டி பாருங்க’.. கிரிக்கெட் பிரபலம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஸ்மித்தும் வார்னரும் அணிக்கு திரும்பி வந்ததால், உலகக் கோப்பை வெல்வதற்கான வாய்ப்புகள் ஆஸ்திரேலியாவுக்கே பிரகாசமாக இருப்பதாகவும் கடந்த கால வரலாறும் அதையேத்தான் சொல்வதாகவுன் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியுள்ள கருத்து இணையத்தில் பரவி வருகிறது.

உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி, கோப்பையை வென்ற வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், இதுவரை நடந்த 11 தொடர்களில் 7 முறை இறுதிக்கும், 5 முறை கோப்பையை வென்றும், குறிப்பாக 1999 முதல் 2007 வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் தொடர்ந்து 3 முறை உலகக் கோப்பையை வென்றும் சாதனை படைத்த அணி ஆஸ்திரேலிய அணிமட்டும்தான் என்று ஆஸ்திரேலொயாவின் முன்னாள் வீரர் வார்னே கூறியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும் உலகக் கோப்பையை இந்த முறை நடத்தவுள்ள இங்கிலாந்தின் ஆடுகளங்களில் விளையாடுவது என்பது எப்போதும் ஆஸ்திரேலியாவுக்கு விருப்பமான ஒன்று என்று கருத்து தெரிவித்துள்ள வார்னே, இந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்ப அணிகளாக இருக்கலாம், ஆனால் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், கடைசியாக நிகழ்ந்த 6 போட்டிகளில் 4 தொடர்களைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியாதான் என்பதால், இந்த முறையும் ஆஸ்திரேலியாதான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,  ‘இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வலுவானவை என்பதில் சந்தேகம் இல்லை; ஆனால் அதே சமயம் உலகின் தலைசிறந்த வீரர்களுக்கான முதல் 5 வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், வார்னர், ஸ்மித், கேன் வில்லியம்ஸன் என்கிற பட்டியலில் 2 பேர் ஆஸ்திரேலிய வீரர்கள். ஆனால் ஸ்மித்தும் வார்னரும் இல்லாத கடந்த 12 மாதங்கள் ஆஸ்திரேலிய அணி பெரும் இழப்பை சந்தித்ததாகவும், அவர்கள் மீண்டும் தற்போது உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இணைக்கப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியாவுக்கு வலுவானதாக அமையும்’ என்றும் பேசியுள்ளார்.

உலகக் கோப்பையை வெல்வதற்கான சாத்தியமுள்ள அணியாக இந்திய அணியின் பெயரை உலகின் முன்னணி வீரர்கள் பலரும் முன்மொழிந்து வந்த நேரத்தில் இப்படி ஒரு கருத்தை வார்னே வெளியிட்டுள்ளது கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ICCWORLDCUP2019, ICCWORLDCUP, AUSTRALIA, SHANEWARNE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்