‘கிரிக்கெட்டில் இருந்து தோனி எப்போ ஓய்வு..?’ பிசிசிஐ தலைவரானதும் கங்குலி சொன்ன அதிரடி பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி, தோனியின் ஓய்வு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவர் தலையிலான இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியபின் விக்கெட் கீப்பராகவும், மூத்த வீரராகவும் அணிக்கு பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடருக்குபின் தோனி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இதனிடையே தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்றகிற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அப்போது தோனியின் மனைவி ஷாக்‌ஷி தோனி அது புரளி என ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை அடக்கினார்.

இந்நிலையில் பிசிசிஐ-யின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்றார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல மாற்றங்களை கொண்டுவர உள்ளோம். நிதி கட்டமைப்பு போன்றவை வெளிப்படையாக இருப்பதில் உறுதியாக உள்ளோம். எந்த விதமான ஊழலுக்கும் இடம் கொடுக்க மாட்டோம்’ என தெரிவித்தார். அப்போது தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெற்றுவிட மாட்டார்கள். இதுதொடர்பாக அவரிடம் நான் பேச உள்ளேன்’ என கங்குலி பதிலளித்தார்.

BCCI, MSDHONI, SOURAVGANGULY, BCCIPRESIDENT, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்