வாயிலேயே விழுந்த பந்து.. பறிபோன 4 பற்கள்.. இலங்கை வீரருக்கு கிரவுண்ட்ல நடந்த சோகம்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

லங்கா பிரீமியர் லீக் போட்டியில் இலங்கை வீரர் சமிகா குணரத்னே காயமடைந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | பாகிஸ்தானில் இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச்சூடு..? போலீசார் குவிப்பு.. முழுவிபரம்..!

இலங்கையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் 5 அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்நிலையில், கண்டி ஃபால்கான்ஸ் மற்றும் காலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் கடந்த புதன்கிழமை பலப்பரீட்சை நடத்தின. ஹம்பன்தோடாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற காலே கிளாடியேட்டர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி, 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கண்டி அணி சேஸிங்கை துவங்கியது. கமிந்து மெண்டிஸின் அதிரடியால் அந்த அணி 15 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில், கண்டி அணி பவுலிங் வீசியபோது எதிர்பாராத விதமாக சமிகா குணரத்னேவுக்கு வாயில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான கார்லோஸ் பிராத்வெயிட் வீசிய பந்தை நுவனிது பெர்னாண்டோ ட்ரைவ் ஆட நினைத்தார். ஆனால், ஷாட் சரியாக கனெக்ட் ஆகாமல் மேலே எகிறியது. அப்போது, ஃபீல்டிங்கில் இருந்த சமிகா அந்த கேட்சை எடுக்க ஓடினார். அப்போது, எதிர்பாராத விதமாக பந்து அவருடைய வாயில் விழுந்தது. இருப்பினும் அவர் கேட்சை கச்சிதமாக எடுத்தார். சக வீரர்கள் கொண்டாட்டத்தில் இருந்தபோது அவர் மட்டும் வாயில் கைவைத்தபடி நின்றிருந்தார். அப்போது, அவருடைய வாயில் இருந்து ரத்தம் வழிவதை பார்த்த அணி நிர்வாகம் உடனடியாக அவரை வெளியேறும்படி அறிவித்தது.

இதனையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். பரிசோதனையில் அவருடைய நான்கு பற்களில் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் கண்டி அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இருப்பினும், சிகிச்சை முடிந்து அவர் மீண்டும் அணியில் சேர்வார் எனவும் அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

Also Read | பெத்த மகனுக்கே ஸ்கெட்ச்.. கரும்பு தோட்டத்தில் இருந்த 6 பேர்.. அப்பா செஞ்ச குலை நடுங்கும் காரியம்..!

CRICKET, CHAMIKA KARUNARATNE, TEETH, ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்