ஒரே பந்து 12 ரன் குளோஸ்.. யாருப்பா அந்த பவுலரு.. இந்தியா VS இலங்கை போட்டியில நடந்த சம்பவம்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்றைய போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் ஒருவர் ஒரே பந்தில் 12 ரன்களை வழங்கியது கிரிக்கெட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஒரே பந்து 12 ரன் குளோஸ்.. யாருப்பா அந்த பவுலரு.. இந்தியா VS இலங்கை போட்டியில நடந்த சம்பவம்.. வீடியோ..!
Advertising
>
Advertising

Also Read | "எல்லாம் என் தலையெழுத்து.. இப்படி படுத்தலாமா என்னை".. ஸ்கூலுக்கு போக சொன்னது ஒரு குத்தமா 😂.. வைரலாகும் சிறுவனின் வீடியோ..!

இந்தியாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முதலாவதாக டி 20 தொடர் நடந்து முடிந்தது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை  2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து தற்போது இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

Chamika Karunaratne Concede 12 runs in a single ball video

இந்நிலையில், கவுஹாத்தி மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர் ஃபெர்னாண்டோ சிறப்பாக ஆடி அரைசதம் எடுத்தார். மற்ற பிளேயர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் அந்த அணி 39.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் சிராஜ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களையும் உம்ரான் மாலிக் 2 விக்கெட்களையும் அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து, சேஸிங்கில் இறங்கிய இந்தியா 43.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. இறுதி நேரத்தில் ராகுல் பொறுப்பாக ஆடி அணியை வெற்றிபெற செய்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றிருக்கிறது.

இந்திய அணி பேட்டிங் செய்யும்போது 37-வது ஓவரை வீச வந்தார் சமிகா கருணரத்னே. முதல் பந்தில் அக்சர் பட்டேல் ரன் ஏதும் எடுக்கவில்லை. இரண்டாவது பந்தில் பவுண்டரி விளாச, அந்த பந்தை நோ-பால் என அறிவித்தார் அம்பையர். இதனையடுத்து ஃப்ரீ ஹிட் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த பந்தை வைடாக வீசினார் சமிகா. இதனால் ஃப்ரீ ஹிட் பந்தை மீண்டும் வீசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த பந்தை எதிர்கொண்ட அக்சர் சிக்ஸர் அடித்து அசத்தினார். ஆக மொத்தம் 37 - வது ஓவரின் இரண்டாவது பந்தில் இந்திய அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.

Also Read | "பந்தை ஏன்யா என்மேல எறியுறீங்க?".. அம்பையர் காலை பதம் பார்த்த பந்து.. ஒரு ரன் அவுட்டுக்கு ஆசைப்பட்டு.. பாவம் மனுஷன்.. வீடியோ..!

CRICKET, CHAMIKA KARUNARATNE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்