"நம்ம 'Focus' ஃபுல்லா 'Hubby' மேல தான்.."மைதானத்தில் குழந்தையாக மாறி.. துள்ளிக் குதித்த கிரிக்கெட் வீரரின் மனைவி.. யாருங்க இது?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடரில் நேற்று (18.04.2022), ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டி, இந்த சீசனின் மிகவும் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்று.
அந்த அளவுக்கு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு, இரு அணி ரசிகர்களையும் தொற்றிக் கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தது.
விறுவிறுப்பான போட்டி..
அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 103 ரன்கள் (61 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) எடுத்து பட்டையைக் கிளப்பி இருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் பட்லர் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். சஞ்சு சாம்சன் மற்றும் ஹெட்மயர் ஆகியோரும் தங்களின் பங்கிற்கு ரன் சேர்க்க, ராஜஸ்தான் அணி அசத்தல் ஸ்கோரை எட்டி இருந்தது.
இதன் பின்னர், கடின இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியும், ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டி ஆடியது. அப்படி இருக்கையில் தான், மொத்த போட்டியையும் ராஜஸ்தான் பக்கம் திருப்பினார் சுழற்பந்து வீச்சாளர் சாஹல். கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட, 17 ஆவது ஓவரை சாஹல் வீசினார்.
ஒரே ஓவரில் நடந்த ட்விஸ்ட்
வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் மாவி மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய நான்கு பேரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி இருந்தார். இந்த ஓவரில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். இப்படி ஒரே ஓவரில், போட்டி ராஜஸ்தான் அணி பக்கம் திரும்பினாலும், கடைசியில் உமேஷ் யாதவ் அதிரடி காட்டினார்.
இருந்த போதும், கடைசி ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா அணி, 210 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது. ஐந்து விக்கெட்டுகள் எடுத்து, போட்டியை மாற்றிய சாஹல், ஆட்ட நாயகன் விருதினையும் தட்டிச் சென்றார்.
துள்ளிக் குதித்த மனைவி
இந்நிலையில், சாஹல் விக்கெட்டுகளை அள்ளிய போது, மைதானத்தில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சாஹல் ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்ததும், மைதானத்தில் இருந்த அவரது மனைவி தனஸ்ரீ வர்மா, குழந்தை போல துள்ளிக் குதித்து கணவரின் சாதனையை கொண்டாடினார். இதற்கு முன்பும், ஒரு போட்டியில் சாஹல் முக்கிய விக்கெட்டுகளை எடுத்ததும் தனஸ்ரீ துள்ளிக் குதித்த வீடியோவும் அதிகம் வைரலாகி இருந்தது.
நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை 17 விக்கெட்டுகள் எடுத்துள்ள சாஹல், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | மாலை சூட்டிய மணமகன்.. மணமேடையில் பளார்'ன்னு கேட்ட சத்தம்.. கல்யாணத்தில் பரபரப்பு
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- IPL 2022: ஒரே ஓவரில் போட்டியின் முடிவை மாற்றிய சாஹல்…. சீட்நுனிக்கு வந்த ரசிகர்கள்… கடைசிவரை திக் திக்
- "ராகுல் ஏன் எப்படி பண்ணாரு.. எனக்கு ஒண்ணுமே புரியல.." விரக்தியில் சுனில் கவாஸ்கர்.. காரணம் என்ன?
- "நீயே மாப்பிள்ளை தேடிக்கோ.." பெண் ரசிகை கொண்டு வந்த பேனர்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு வந்த 'Proposal'..
- IPL 2022 : மீண்டும் வந்த கொரோனா.. "இந்த தடவ ஒரு பிளேயருக்காம்.." அடுத்த போட்டிக்கு சிக்கல்??.. அச்சத்தில் ரசிகர்கள்
- திடீரென.. கோபத்தில் தொப்பி'ய தூக்கி வீச பாத்த 'ஜடேஜா'.. "அது மட்டும் நடந்திருந்தா சிஎஸ்கே தான் ஜெயிச்சிருக்கும் போல"
- "1000 கிமீ டிரைவிங் செஞ்சு வந்திருக்கோம்".. வைரலான RCB ரசிகரின் போஸ்டர்.. தினேஷ் கார்த்திக் கொடுத்த செம்ம ரிப்ளை..!
- IPL 2022: “நாங்க நல்லாதான் ஆரம்பிச்சோம்” “டி 20 போட்டியோட அழகே அதுதான்” – தோனி போல கூலாக பேசிய ஜடேஜா!
- VIDEO: ‘அவுட்டான கோபம்’.. பெவிலியன் திரும்பியபோது ‘ஆக்ரோஷமாக’ MI வீரர் செஞ்ச காரியம்.. விட்டு விளாசும் நெட்டிசன்கள்..!
- தொடர்ந்து 6 தோல்வி.. மேட்ச் முடிஞ்சதும் ‘ரோகித்’ சொன்ன வார்த்தை.. ‘பாவம் மனுசன் மனசு உடைஞ்சி போய்ட்டாரு’..!
- "இவரை ஏன் இந்திய அணி கண்டுக்கவே இல்ல.. அவர் மாதிரி ஆளுங்க டீமுக்கு வேணும்"..நடராஜனை புகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..!