"நொந்து நூடுல்ஸா நின்னுட்டு இருந்தேன்.." பக்கத்துல வந்த 'தோனி', கூலா ஒன்னு சொன்னாரு பாருங்க.. சாஹல் சொன்ன ரகசியம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தலைமை பண்பு பற்றி, சுழற்பந்து வீச்சாளர் சாஹல் ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு சமயத்தில், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரது இடத்தை புதிதாக வந்த சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் பிடித்துக் கொண்டனர்.
இதில், சாஹல் கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்திய அணிக்குள் நுழைந்தார். தோனி கேப்டனாக இருந்த சமயத்தில், அவரது தலைமையில் ஆடிய சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர், மிகச் சிறப்பாக பந்து வீசி, எதிரணியினரை திணறடித்தனர்.
ஐடியா வழங்கிய தோனி
தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டே, அவருக்கு சிறந்த ஐடியாக்களை வழங்க, அதன்படி செயல்பட்ட குலதீப் - சாஹல், அதிக விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து, தோனி அணியில் இருந்து விலகவே, இந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் இடத்தை தக்க வைக்க கடுமையாக அவதிப்பட்டனர். தற்போது வரை கூட, அவர்களுக்கு மாறி மாறி தான், இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
மனம் திறந்த சாஹல்
இதில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம்பிடித்த சாஹல், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடரிலும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், ஒரு போட்டிக்கு மத்தியில், தோனி தனக்கு வழங்கிய ஆதரவு ஒன்றைக் குறித்து, சாஹல் தற்போது மனம் திறந்துள்ளார்.
மோசமான பந்து வீச்சு
இது பற்றி பேசிய சாஹல், 'தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 போட்டி ஒன்றில், நான் 64 ரன்களை அள்ளிக் கொடுத்தேன். அந்த அணி வீரர் கிளேசன், என்னுடைய பந்தினை நாலாபுறமும் ஓட விட்டுக் கொண்டிருந்தார். மஹி பாய் என்னிடம், மறுமுனையில் இருந்து பந்து வீச சொன்னார். நான் அப்படி செய்த போதும், பந்து சிக்சருக்கு சென்றது.
தோனியின் அறிவுரை
பிறகு, தோனி பாய் என் பக்கத்தில் வந்த போது, "இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?" என கேட்டேன். "எதுவும் செய்ய வேண்டாம். நான் உன்னை பார்க்க தான் வந்தேன். இன்று உனது நாளாக அமையவில்லை. நீ முயற்சி செய்கிறாய். ஆனால், ஏதும் நடக்கவில்லை. அதிகமாக இதை பற்றி யோசிக்காதே. உனது 4 ஓவர்களை முடித்து விட்டு, கூலாக இரு" என தோனி பதில் கூறினார்.
கடந்து செல்ல வேண்டும்
அப்படிப்பட்ட ஒரு நேரத்தில், என்னை யாராவது திட்டியிருந்தால், எனது நம்பிக்கையின் அளவு, இன்னும் குறைந்து போயிருக்கும். அதே போல, தோனி இன்னொரு விஷயமும் கூறுவார். அனைத்து போட்டிகளிலும், உன்னால் சிறப்பாக செயல்பட முடியாது. சில நேரத்தில், மற்றவர்களும் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று. அது உண்மை தான். அனைத்து நாளும், நமக்கானதாக அமைந்து விடாது. சில நேரம் நாம் மோசமாக பந்து வீசினால், அதனை பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளாமல், தோனி கூறுவதை போல கடந்து செல்ல வேண்டும்' என சாஹல் தெரிவித்துள்ளார்.
தோனி தான் பெஸ்ட்
இந்திய அணியில் இருந்து தோனி விலகினாலும், தொடர்ந்து அவரது கேப்டன்சி மற்றும் தலைமை திறன் குறித்து, பல வீரர்கள் கருத்து தெரிவித்து வருவது, தோனி இந்திய அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த தலைவர் என்பதை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வரலாறு படைக்க போகும் இந்திய அணி.. எந்த அணியும் தொடாத உயரம்.. எல்லாம் ரோஹித் கேப்டன் ஆன நேரம் போல
- தளபதி கம்பீர் Vs தல தோனி.. ஐபிஎல் மெகா ஏலம்.. மல்லுக்கட்ட போகும் பெரிய தலைகள்??.. பின்னணி என்ன?
- கோலி போன வருச ஐபிஎல் அப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டாரு.. போட்டுடைத்த பாண்டிங்..!
- தோனி, பிசிசிஐ குறித்து ஒரே interview.. மொத்த பர்னிச்சரையும் உடைத்த ஹர்பஜன் சிங்!
- IPL ஏலத்தில் முதல் பூட்டான் வீரர்??.. Dhoni கொடுத்த 'நச்' அட்வைஸ்.. பட்டையைக் கிளப்புங்க தம்பி
- ராகுலை வைத்து இந்திய அணி பெருசா போட்ட பிளான்??.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே கிரிக்கெட் பிரபலம்
- ச்ச.. இந்த மனுசனுக்காகவாது மேட்ச் ஜெயிச்சிருக்கலாம்.. கடைசி ஓவரில் சஹால் பண்ண ‘பெரிய’ தப்பு.. விட்டு விளாசும் நெட்டிசன்கள்..!
- என்னது இந்தியா டீமுக்குள்ள ‘ரெண்டு’ கேங்கா பிரிஞ்சு இருக்காங்களா..? கொழுத்திப் போட்ட பாகிஸ்தான் வீரர்..!
- வெளியானது இந்த வருட T20 உலககோப்பை போட்டி அட்டவணை.. இந்தியாக்கு வாய்ப்பிருக்கா? யார் யார் கூட மேட்ச் இருக்கு? முழு தகவல்
- தோனி வாங்கியுள்ள மஞ்சள் நிற விண்டேஜ் கார்.. எழுபதுகளில் இந்த கார் பயங்கர ஃபேமஸ்.. அப்படி என்ன ஸ்பெஷல்?