“மதுபோதையில் என்னை 15-வது மாடியில் இருந்து தூக்கி வீச பாத்தாரு”.. MI அணியில் விளையாடியபோது நடந்த ஷாக்.. பரபரப்பை கிளப்பிய சஹால்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர் சஹாலை 15-வது மாடி பால்கனியில் வீரர் ஒருவர் மதுபோதையில் தூக்கி வீச முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 15-வது சீசனில் சஹால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 3 போட்டியில் சஹால் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். கடந்த 2020 ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணிக்காக நீண்ட ஆண்டுகள் சஹால் விளையாடினார். ஆனால் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு இவரை அந்த அணி விடுவித்தது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணி சஹாலை ஏலத்தில் எடுத்தது. அதேபோல் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் உரையாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், 2013-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது வீரர் ஒருவர் 13-வது மாடி பால்கனியில் இருந்து தூக்கி வீச முயன்றதாக அதிர்ச்சி தகவலை சஹால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘இந்த விஷயத்தை இதுவரை யாரிடமும் சொன்னது இல்லை. இப்போது இந்த வீடியோ மூலம் உலகிற்கு தெரியட்டும். பெங்களூருவில் ஐபிஎல் லீக் போட்டிக்காக வந்திருந்தோம். போட்டி முடிந்தவுடன் ஹோட்டலில் வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி மது அருந்தினர். அப்போது வீரர் ஒருவர் என்னை முறைத்து பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று அவர் என்னை தூக்கி கொண்டு 15-வது மாடி பால்கனியிலிருந்து என்னை தூக்கி வீச முயன்றார். நான் அதிர்ச்சியில் என்னை காப்பாற்றுங்கள் என்று கத்தினேன்.
அந்த வீரரின் கழுத்தை நன்காக பிடித்து கொண்டேன். அப்போது அங்கிருந்த சக வீரர்கள் என்னை அவரிடமிருந்து காப்பாற்றினர். நான் பயத்தில் மயங்கிவிட்டேன். பிறகு தண்ணீரை முகத்தில் தெளித்த பிறகு எனக்கு நினைவு திரும்பியது. அன்று நான் 15-வது மாடியிலிருந்து கீழே விழுந்திருப்பேன். இதுகுறித்து நானோ, மற்ற வீரர்களோ எந்த புகாரும் அளிக்கவில்லை. இந்த காரியத்தை செய்த வீரரின் பெயரை வெளியிட விரும்பவில்லை. அந்த சம்பவத்துக்கு பின் போட்டிக்காக வெளியே செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை கற்று கொண்டேன்’ என சஹால் தெரிவித்துள்ளார். இது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஆமா அது என் தப்புதான்.. அதுக்காக இப்படி பண்ணாதீங்க".. இந்திய ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ஐபிஎல் வீரர்..!
- சர்ச்சையான தோனி நடிச்ச ஐபிஎல் விளம்பரம்.. மத்திய ஒளிபரப்பு துறை அதிரடி நடவடிக்கை..!
- “நெறைய பணம் செலவு செஞ்சிருக்காங்க.. நிச்சயம் ஏதாவது செய்வாங்க”.. MI அணி பற்றி பாகிஸ்தான் வீரர் சொன்ன கருத்து..!
- VIDEO: யாருப்பா இந்த பையன்..? முதல் மேட்ச்லயே தரமான சம்பவம்.. ஏபிடி மாதிரி மிரட்டிய MI வீரர்..!
- "கையெழுத்து போடுங்க, இல்லன்னா.." 'CSK' உத்தப்பாவுக்கு MI வைத்த செக்.. பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான பரபரப்பு தகவல்
- “அவர் இப்படி அடிப்பார்ன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல”.. தொடர் தோல்வி.. நொந்துபோய் ரோகித் சர்மா சொன்ன பதில்..!
- "ரெய்னா'வ எடுக்கல'ன்னு சொல்லி என்ன தான் திட்டுனாங்க.." பிரபல சிஎஸ்கே வீரர் பகிர்ந்த விஷயம்..
- "ஏற்கனவே மேட்ச் தோத்த கடுப்பு.." கோபத்தில் கத்திய ரோஹித்.. அதுவும் யாருகிட்ட தெரியுமா??.. வைரல் வீடியோ
- 'கணவர்' எடுத்த முக்கிய விக்கெட்.. சந்தோஷத்தில் மனைவி செய்த காரியம்'.. யாருங்க இவங்க??
- ஷிகர் தவனின் லவ் Proposal-ஐ மறுத்த பெண்.. அண்ணாமலை ஸ்டைலில் தவன் கொடுத்த செம்ம ரிப்ளை..வைரல் வீடியோ..!