"இன்சல்ட் பண்ணிட்டீங்க.. இதே இந்திய அணியா இருந்தா இப்டி செய்வீங்களா??.. கடுப்பான வீரர்.. என்னமோ நடந்துருக்கு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தற்போது டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

Advertising
>
Advertising

முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றிருந்த டி 20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியிருந்த நிலையில், அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமானது.

இதன் முதல் டெஸ்ட் போட்டி, டிராவில் முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை மறுநாள் (மார்ச் 16) ஆரம்பமாகிறது.

கடைசி நாள் ஆட்டம்

இதனிடையே, முதல் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் செயல் குறித்து, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஒருவர் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஐந்தாவது நாளின் போது, இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிக் கொண்டிருந்தது. 67 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்த போது, கடைசி நாள் ஆட்டம் முடிய சுமார் 30 ஓவர்கள் மேல் இருந்தது.

நங்கூரம் போல நிலைத்த ஜோடி

ஒரு வேளை இங்கிலாந்து அணி, அடுத்த ஆறு விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தி விட்டால் வென்று விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான ஹோல்டர் மற்றும் நிக்ருமா ஆகியோர் நங்கூரம் போல நிலைத்து நின்று, மேற்கொண்டு விக்கெட் விழாத வகையில் பார்த்துக் கொண்டனர்.

ஜோ ரூட்டின் செயல்

கடைசியில் சில ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில், இங்கிலாந்து அணி வெற்றி பெற முடியாது என தெரிந்த பிறகும் ஜோ ரூட் போட்டியை முடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. கடைசி ஓவர்களில், ஐந்து பந்துகள் மீதமிருக்கும் போது தான், டிராவில் முடிக்க ஜோ ரூட் ஒப்புக் கொண்டார். அதாவது, வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் இன்னும் ஆறு இருக்க, அதனை ஐந்து பந்துகளில் எடுத்து விட முடியாது என்பதால், தங்களின் வெற்றிக்கு வாய்ப்பில்லை என்பதால் ஜோ ரூட் அப்படி முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து எடுத்த முடிவு

இந்நிலையில் போட்டிக்கு பிறகு, ஜோ ரூட் பற்றி பேசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லஸ் பிராத்வெய்ட், "வெஸ்ட் இண்டீஸ் அணியை அவமானப்படுத்தும் வகையில் ஜோ ரூட் நடந்து கொண்டதாக தான் நான் உணர்கிறேன். கடைசி 10 ஓவர்களில், ஆறு விக்கெட்டுகளை எடுத்து விடலாம் என இங்கிலாந்து அணி நினைத்திருப்பார்கள். இதனால் தான், ஐந்து பந்துகள் இருக்கும் போது, போட்டியை முடிக்க முடிவு செய்துள்ளனர்.

கோபப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்

நீங்கள் ஒரு சிறந்த அணியாக மாற வேண்டும் என நினைத்தால், அதனை போல நீங்கள் சிந்திக்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த இடத்திற்கு வரவில்லை. ஆனால், ஆஷஸ் டெஸ்ட் அல்லது இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றால், இங்கிலாந்து அணி இப்படி செய்திருக்குமா?. நிச்சயம் இல்லை என்றே நான் நினைக்கிறன். இதே தான் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக இருந்தாலும்.

நிரூபிப்போம்

அப்படி இருக்கும் போது, எங்களுக்கு எதிராக மட்டும் ஏன் இப்படி செய்தார்கள்?. நாங்கள் சிறந்த அணி என்பது அவர்களுக்கு எதிராக ஆடிய ஆட்டம் மூலம் நிரூபணம் ஆகிறது. இன்னும் இரண்டு டெஸ்ட்  போட்டிகள் மீதமிருக்கிறது. இங்கிலாந்து நினைப்பதை விட, நாங்கள் சிறந்த அணி என்பதை அந்த போட்டிகளில் நிரூபிப்போம்" என பிராத்வெய்ட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் செயலால், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கோபத்தில் இருப்பதால், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

CARLOS BRATHWAITE, ENG VS WI, JOE ROOT, ASHES, கார்லஸ் பிராத்வெய்ட், ஜோ ரூட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்