"உனக்கு என்ன ஆச்சு??.." திடீரென கத்திய ரோஹித் ஷர்மா.. மைக்கில் பதிவான 'ஆடியோ'.. போட்டிக்கு நடுவே நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

இந்திய அணிக்கு எதிராக, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 தொடர்களில் கலந்து கொள்வதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றிருந்த முதலாவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து, இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும், 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

பேட்டிங்கில் தடுமாற்றம்

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பந்து வீசியதால், அதிக ரன்களை இந்திய அணியினரால் குவிக்க முடியவில்லை. அதிகபட்சமாக சூர்யகுமார், 64 ரன்கள் எடுத்திருந்தார்.

அசத்திய இந்திய அணி

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ரன் சேர்க்கவே கடுமையாக திணறியது. சிறிய இடைவெளியில், விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்க, இந்திய அணி பந்து வீச்சாளர்கள், மிகச் சிறப்பாக பந்து வீசி அசத்தினர். இலக்கை எட்ட முடியாமல், வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பிரஷித் கிருஷ்ணா மேஜிக்

இறுதியில், 46 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 193 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால், இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் சொந்தமாக்கியது. இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா, 9 ஓவர்கள் பந்து வீசி, 3 ஓவர்கள் மெய்டனுடன், 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகளை அள்ளினார். அது மட்டுமில்லாமல், ஆட்ட நாயகன் விருதினையும் தட்டிச் சென்றார்.

கேப்டனுக்கு பாராட்டு

புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் ஷர்மா, தன்னுடைய முதல் ஒரு நாள் தொடரையே அசத்தலாக வென்று கொடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல், இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை மிகக் கச்சிதமாகவும் வழி நடத்தியிருந்தார். அவரது தலைமைக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ரோஹித் ஷர்மா ஆக்ரோஷம்

இதனிடையே, போட்டிக்கு மத்தியில் ஒரு வீரரிடம் ஆக்ரோஷமாக ரோஹித் ஷர்மா பேசும் வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, வேகமாக ஃபீல்டிங் செய்யாமல், இந்திய வீரர் ஒருவர் நின்றதாக தெரிகிறது. அப்போது, குறிப்பிட்ட அந்த வீரரிடம் பேசிய ரோஹித் ஷர்மா, 'உனக்கு என்ன ஆச்சு?. நீ ஏன் சரியாக ஓடாமல் நிற்கிறாய்?. வேகமாக அங்கே ஓடி போ' என ஹிந்தியில் கத்தினார்.

 

மைக்கில் பதிவான ஆடியோ

இது தொடர்பான ஆடியோ, மைக் ஸ்டம்பில் பதிவாகியுள்ளது. போட்டியினை நேரில் கண்ட பலரும், அந்த வீரர் சாஹல் தான் என தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ, அதிகம் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் குறித்தும், அந்த சமயத்தில் ஃபீல்டிங் நின்ற வீரர் நிலைமையைக் குறித்தும், பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

ROHIT SHARMA, PRASIDH KRISHNA, IND VS WI, CHAHAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்