Dugout-ல உக்கார்ந்திருந்தா சும்மா இருக்கிறதா..?- விராட் கோலி செய்த காரியம்; பரபரத்த மைதானம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று அதிரடி காண்பித்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் யார் வெல்கிறார்களோ அவர்களே தொடரைக் கைப்பற்ற முடியும் என்கிற நிலை உருவானது.

Advertising
>
Advertising

மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி கொடுத்தது.

ஆனால் பேட்டிங்கில் விட்டதை இந்திய அணி பவுலிங்கில் சாதித்துக் காட்டியது. தென் ஆப்ரிக்காவை 210 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்து இரண்டாவது நாளான நேற்று மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது இந்தியா.

தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா, 57 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து போராடி வருகிறது. இதன் மூலம் இந்தியா 70 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. எப்படியும் 250 ரன்களுக்கு மேல் லீடிங் எடுத்தால் தென் ஆப்ரிக்காவால் இலக்கை அடைவது கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலியும் புஜாராவும் களத்தில் நிதானமாக ஆடி வருகிறார்கள். மூன்றாவது போட்டியில் முடிவு உறுதி என்பதால் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தென் ஆப்ரிக்காவின் முதல் இன்னிங்ஸின் போது, இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி, திடீரென வந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்து கெத்து காட்டினார். களத்தில் இருந்த இந்திய வீரர்கள் அனைவரும் உற்சாக மிகுதியில் ஷமியைப் பாராட்டிக் கொண்டிருந்த போது, டக்-அவுட்டில் அமர்ந்திருந்த வீரர்களான முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ், ரிடிமன் சஹா, பிரியாங்க் பாஞ்சல் ஆகியோர் பெரிதாக ஆரவாரம் செய்யாமல் இருந்தனர்.

இதைப் பார்த்த கேப்டன் கோலி, அவர்களைப் பார்த்து, ‘நல்லா கை தட்டி சப்போர்ட் பண்ணுங்க’ என்று கத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து டக்-அவுட்டில் இருந்த வீரர்களும் கரகோஷம் எழுப்பியும், கூச்சல் போட்டும் களத்தில் இருந்த வீரர்களை உற்சாகப்படுத்தி உள்ளனர். இது குறித்த வீடியோக்களும் போட்டோக்களும் தற்போது வைரலாகி வருகிறது.

விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஸி சமீபத்தில் பறிக்கப்பட்ட நிலையில், அவர் டெஸ்ட் களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறார்.

CRICKET, விராட் கோலி, டக் அவுட், VIRAT KOHLI, INDVSSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்