கேப் டவுனில், கோச் சாதனையை பிரேக் பண்ணுவாரா கேப்டன் கோலி?? அது மட்டும் நடந்தா...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோற்ற பின்னர் 3-வது போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி போராடிக் கொண்டிருக்கிறது இந்திய அணி.

Advertising
>
Advertising

டெஸ்ட் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் தொடங்க இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக இல்லாமல் போனது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. இந்நிலையில் முழு உடல் தகுதி பெற்றுள்ள கேப்டன் கோலி, மூன்றாவது டெஸ்ட்டில் மிகப் பெரும் சாதனையை முறியடிக்கும் முயற்சியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்ரிக்க மண்ணில், இந்திய கிரிக்கெட் அணி சார்பில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் முன்னாள் வீரரும், இன்னாள் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் தான். இதுவரை தென் ஆப்ரிக்காவில் 11 டெஸ்ட்டுகளில் விளையாடியுள்ள ராகுல் டிராவிட், 624 ரன்கள் குவித்துள்ளார்.

அதே நேரத்தில் விராட் கோலி 611 ரன்கள் குவித்து, வெறும் 14 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளார். இந்தப் பட்டியலில் டாப்பில் இருப்பவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். அவர் மொத்தமாக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,161 ரன்கள் குவித்து இருக்கிறார்.

இப்படி தனிப்பட்ட மைல்கல்லை கோலி கடக்க அதிக வாய்ப்புள்ள அதே நேரத்தில், இதுவரை கேப்டவுனில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெற்றதில்லை. அந்த வரலாற்றை மாற்றும் முயற்சியிலும் கோலி தலைமையிலான இந்திய அணி முழுத் திறனை வெளிக்காட்டும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் போட்டியில் வென்றால் மட்டும் தான் தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் பெருமையையும் இந்திய அணி பெறும்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கெத்துக் காட்டியது. இரண்டாவது போட்டியில் கோலி இல்லாமல் கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து பின்னடைவைச் சந்தித்தது. ராகுல், துடிப்பாக கேப்டன்ஸி செய்யாததும், கோலியின் ஓய்வுமே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளைய போட்டியில் இந்திய அணி, முழுப் பலத்துடன் களமிறங்கும்.

CRICKET, கேப்டன் கோலி, கோச் டிராவிட், விராட் கோலி, CAPTAIN VIRAT KOHLI, COACH DRAVID, CAPE TOWN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்