அடித்து விளாசிய மிடில் ஆர்டர்… பந்துகளை பறக்கவிட்ட வீரரைப் பார்த்து ரோகித் சர்மா செய்த ‘செயல்’… வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா- நியூசிலாந்து மோதிய டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாக விளையாடி கைப்பற்றியது. இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இளம் அணியினர் அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றிக் கோப்பையை உறுதி செய்துள்ளனர்.

Advertising
>
Advertising

இந்தியா- நியூசிலாந்து மோதிய 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று மாலை கொல்கத்தாவின் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்வதாகத் தேர்ந்தெடுத்த இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தது. ஆனால், தொடர் இடைவெளிகளில் இந்தியாவின் டாப் ஆர்டர் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுக்கத் தொடங்கியது.

7 விக்கெட்டுகள் இழப்புக்குப் பின்னர் மிடில் ஆர்டரில் விளையாட இந்திய அணியிடம் தீபக் சஹர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இருந்தனர். நியூசிலாந்தின் சார்பில் ஆடம் மில்னே பந்து வீசினார். எடுத்ததுமே அடித்து விளாசத் தொடங்கிய தீபக் சஹர் 3 பந்துகளில் 10 ரன்களை விளாசித் தள்ளினார். 4-வது பந்தை மில்னே வீசிய போது ஒரு டென்னிஸ் பந்தை அடித்து விளாசுவது போல அடித்தார் தீபக் சஹர். அந்த பந்து 95 மீட்டர் சிக்ஸ் ஆக தெறித்தது.

ஒரு குறைவான தூரத்தில் வீசப்பட்ட பந்தை சிக்ஸ் ஆக மாற்றியதற்காக தீபக் சஹருக்கு டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து ஆட்டத்தை பார்த்துக்கொண்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா ஒரு ‘ராயல் சல்யூட்’ அடித்தார். இதன் மூலம் கடைசி ஓவரில் இந்திய அணி 19 ரன்களை விளாசி மொத்தமாக 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் ஸ்கோர் செய்திருந்தது.

மற்ற வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா 31 பந்துகளுக்கு 56 ரன்கள், இஷன் கிஷன் 29 ரன்களில் 6 முறை பவுண்டரி விளாசியது என அனைத்துமே இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது. இதுவரையில் இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர் ஆகக் கருதப்பட்டு வந்த சஹர் நேற்று தனது பேட்டிங் திறனையும் நிருபித்துவிட்டார். முதன் முறையாக முழு நேர டி20 கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோகித் சர்மா தனக்கான முதல் தொடரையே வெற்றியுடன் தொடங்கி உள்ளார்.

அடுத்ததாக இந்தியா- நியூசிலாந்து மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சந்தித்த மோசமான தோல்விக்கு இந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 வெற்றி சற்றே ஆறுதலாய் இருப்பதாக நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

CRICKET, ROHIT SHARMA, DEEPAK CHAHAR, AXAR PATEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்