VIDEO: இதெல்லாம் ரொம்ப மோசம்.. அவுட்டில் இருந்து தப்பிக்க இப்படியா பண்ணுவீங்க.. சர்ச்சையை கிளப்பிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மகளிர் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

Advertising
>
Advertising

மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டி மெக்சிக்கோவில் நடைபெற்றது. இதில் கனடா மகளிர் கிரிக்கெட் அணியும், அமெரிக்க மகளிர் கிரிக்கெட் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 85 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திவ்யா சக்சேனா (Divya Saxena) 40 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த அமெரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் கனடா மகளிர் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இப்போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில், போட்டியின் முதல் ஓவரின் 4-வது பந்தை கனடா வீராங்கனை திவ்யா சக்சேனா எதிர்கொண்டார். ஆனால் பந்து எட்ஜ்சாகி கேட்சானது. உடனே அமெரிக்க வீராங்கனைகள் அதை பிடிக்க ஓடி வந்தனர்.

அப்போது திவ்யா சக்சேனா திடீரென குறுக்கே ஓடி வந்தார். இதனால் அமெரிக்க வீராங்கனைகளால் கேட்ச் பிடிக்க முடியாமல் போனது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் திவ்யா சக்சேனாவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

CRICKET, USA, CANADIA, DIVYASAXENA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்