இந்த போட்டோவில் இருக்கும் ஒரு லெஜண்ட்.. அது யாருன்னு தெரியுதா? ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத பெயர் தோனி. கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி, பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார். சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல், சிறந்த விக்கெட் கீப்பராகவும், ஃபினிஷராகவும் அவர் இருந்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு தோனியின் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதே கையோடு 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. இதனை அடுத்து 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐசிசி நடத்தும் இந்த 3 தொடர்களிலும் கோப்பையை கைப்பற்றிய ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2010 மற்றும் 2016-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரையும் தோனியின் தலைமையிலான இந்திய அணி வென்றது. அதேபோல் 2009-ம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை முதல் இடத்துக்கு கொண்டு வந்தார்.

இப்படி கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த தோனி, நேற்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தோனியின் பள்ளிப்பருவ போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இதில் தோனியை கண்டுபிடிக்க முடியுமா? என கேள்வி எழுப்பி இருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வைரலானது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்