‘டி20 போட்டினு நினைச்சுக்கிட்டாரு போல’... ‘இந்த வீரர்கள் எல்லாம் ஏன் எடுக்கல’... ‘கோலியை விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின், கேப்டன்ஷிப்பை புரிந்து கொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரில் இரு போட்டிகளிலும் மோசமான தோல்வி அடைந்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதில் நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில், 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்திய அணி தொடர்ச்சியாக 7-வது ஒருநாள் போட்டித் தோல்வியைச் சந்தி்த்தது, தொடர்ந்து 2-வது ஒருநாள் தொடரையும் இழந்தது. இந்நிலையில், கேப்டன் கோலியின் செயலை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியாதாவது, ‘விராட் கோலியின் கேப்டன்ஷிப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது எவ்வளவு முக்கியத்துவம் . அப்படி தொடக்கத்திலேயே வீழ்த்தினால்தான் வலிமையான ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை தடுக்க முடியும். ஆனால், பும்ரா போன்ற முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கு 2 ஓவரோடு தொடக்கத்திலேயே நிறுத்துவது எப்படி சரியாகும்.

பொதுவாக ஒருநாள் போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளருக்கு முதலில் 4 ஓவர்கள், அதன்பின் 3 ஓவர்கள், கடைசியில் 3 ஓவர்கள் என பிரித்து வழங்குவார்கள். முதல் 10 ஓவர்களில் 4 ஓவர்களையாவது பும்ராவுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பும்ராவுக்கு 2 ஓவரோடு நிறுத்திவிட்டால், எவ்வாறு ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். கோலி என்ன மாதிரி கேப்டன்ஷிப் செய்கிறார் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவரின் கேப்டன்ஷிப்பை பற்றி விளக்கமாகப் பேசக்கூட முடியாது. இது டி20 போட்டி என கோலி நினைத்துக்கொண்டிருக்கிறாரா?. கோலியின் கேப்டன்ஷிப் செய்ததற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியாது, மோசமான கேப்டன்ஷிப்பாக இருக்கிறது. 6-வது பந்துவீச்சாளர் குறித்த பிரச்சினை ஏற்பட்டால், வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷிவம் துபே இருவரில் ஒருவரே அணிக்குள் கொண்டு வரலாம்.

பின்னர் எவ்வாறு ஒருநாள் போட்டியை அணுகமுடியும். இருவரும் ஆஸ்திரேலியத் தொடருக்குச் செல்லவில்லை என்றால், அது தேர்வுக்குழுவின் மிகப்பெரிய தவறாகத்தான் இருக்க முடியும். நீங்கள் ஒருவர் குறித்த தீர்மானத்துக்கு வராதவரை சர்வதேச அளவில் அவர் எவ்வளவு சிறந்தவர் என்பதை நீங்கள் ஒருபோதும் கணிக்க முடியாது. இந்திய அணி இருவரையும் ஆஸ்திரேலியப் பயணத்துக்கு தேர்வு செய்யவில்லை. இதனால் மிகப்பெரிய அடியுடனே இந்திய அணி திரும்பக்கூடும்’ என்று அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்