VIDEO: இன்னும் ஆரம்பிக்கவே இல்ல.. அதுக்குள்ள முடிச்சிட்டீங்க.. இங்கிலாந்து வீரரை மிரள வைத்த பும்ரா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று நாட்டிங்ஹாம் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி களமிறங்கினர். ஆனால் ஆட்டத்தின் முதல் ஓவரே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பும்ரா வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தில் ரோரி பர்ன்ஸின் காலில் பந்து பட்டுச் சென்றது. இதனால் அம்பயர் அவுட் கொடுத்தார். உடனே ரோரி பர்ன்ஸ் மூன்றாம் அம்பயரிடம் ரிவியூ கேட்டார்.

ஆனால் ரிவியூவில் பந்து பேட்டில் படாமல் நேராக காலில் பட்டது தெரிந்தது. மேலும் மிடில் ஸ்டம்புக்கு நேராக சென்றது. இதனால் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் 183 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் கேப்டன் ஜோ ரூட் மட்டும் 64 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை பும்ரா 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்